Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/என்ன செய்ய வேண்டும் ராமநாதபுரத்திற்கு : நகராட்சி தலைவர் வேட்பாளர்களே கவனியுங்கள்...

என்ன செய்ய வேண்டும் ராமநாதபுரத்திற்கு : நகராட்சி தலைவர் வேட்பாளர்களே கவனியுங்கள்...

என்ன செய்ய வேண்டும் ராமநாதபுரத்திற்கு : நகராட்சி தலைவர் வேட்பாளர்களே கவனியுங்கள்...

என்ன செய்ய வேண்டும் ராமநாதபுரத்திற்கு : நகராட்சி தலைவர் வேட்பாளர்களே கவனியுங்கள்...

ADDED : அக் 08, 2011 11:00 PM


Google News

சேது மன்னர்கள் ஆண்ட பெருமை கொண்டதும், விவேகானந்தரை அமெரிக்காவிற்கு அனுப்பிய பெருமையும் கொண்டது ராமநாதபுரம்.

மன்னர்கள் ஆண்ட காலத்தில் மிக சிறந்து விளங்கி, அதன்பின், 'கழுதை தேய்ந்து கட்டெரும்பு' ஆன கதை போல், வறட்சிக்கு பெயர்போன ராமநாதபுரமாக மாறிவிட்டதுதான் பெரிய கொடுமை. மன்னர்கள் ஆண்டபோது, நகர் சிறப்பாக இருந்தது. அதன்பின் மக்கள் பிரதிநிதிகள் ஆட்சி செய்ய துவங்கியபின், பிரதிநிதிகள் தங்கள் 'வளத்தை' மட்டுமே பெருக்கிக் கொண்டனர். ஆனால் நகரின் வளம், பின்தங்கி செல்ல துவங்கிவிட்டது என்பதுதான் மறுக்கமுடியாத கசப்பான உண்மை. ராமநாதபுரம் நகராட்சி அடிப்படை கட்டமைப்பு, வசதிகள், சுகாதாரம் இல்லாமல் போனது ஏன்? என்பதுதான் மக்களின் மன குமுறல்கள்...



என்ன வேண்டும் ராமநாதபுரத்திற்கு: இதோ... ராமநாதபுரம் மக்களின் தேவைகளை உணர்ந்து, எதிர்பார்ப்பை சுமந்து 'தேர்தல் அறிக்கை' வெளியிடுகிறது தினமலர். வழக்கமாக கட்சிகள்தான் தேர்தல் அறிக்கை வெளியிடும். வாசகர்களின் சார்பாக தினமலர் வெளியிடும் இந்த தேர்தல் அறிக்கையை வேட்பாளர்கள் தாங்கள் நிறைவேற்றப்போகும் வாக்குறுதிகளாக எடுத்து கொள்ளவேண்டும். 'வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்' என உளமாற உறுதிகூறும் வேட்பாளரை, ராமநாதபுரத்திற்கு நல்லது செய்ய விரும்பும் நகர தந்தையாக ஏற்றுகொள்வோம்



இனி வாக்குறுதிகள்

* மாவட்டத்தில் 617 கோடி ரூபாய் மதிப்பில் கூட்டுகுடிநீர் திட்டம் செயல்பட்டாலும், நகராட்சியில் மக்கள், இன்றும் தனியார் லாரியில் மூன்று ரூபாய் கொடுத்துதான் குடிநீரை விலைக்கு வாங்குகின்றனர். காரணம், கூட்டுகுடிநீர் கழிவுநீர் கலந்து வருவது தான். இதை மாற்றி கூட்டுகுடிநீர் சுகாதாரமாகவும் சுத்தமாகவும் வர வேண்டும்.

* கொசுவை ஒழிப்பதற்காக பல லட்சங்கள் செலவு செய்ததும், திடக்கழிவு மேலாண்மையை கற்றுகொள்ள, இங்குள்ள அதிகாரிகள் டில்லி வரை சென்று பயிற்சி பெற்றதெல்லாம் வீணாகிவிட்டது. அல்லிகண்மாய் பகுதிகளில் கொட்டப்படும் குப்பைகளை ஊரின் ஒதுக்குப்புறமான பகுதிகளில் கொட்டி திடக்கழிவு மேலாண்மை அடிப்படையில் மறுசுழற்சி செய்ய வேண்டும்.

*அரண்மனை உள்ளிட்ட நகரின் அனைத்து பகுதிகளிலும் சுற்றித்திரியும் மாடுகளால் மாணவர்கள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இதற்கு தீர்வு காண வேண்டும்.

* அரண்மனை பகுதியில் போக்குவரத்து நெரிசல் என்பது நீண்டகால பிரச்னையாகவே உள்ளது. இங்குள்ள நடைபாதை கடைகளுக்கு மாற்று இடம் கொடுத்து பாதசாரிகள் இடையூறின்றி நடந்து செல்ல வேண்டும்.

* குண்டும், குழியுமாக உள்ள ரோடுகளை சீரமைக்க வேண்டும்.

* பல பூங்காக்கள் சீட்டாட்டம் மற்றும் 'பார்'களாக மாறிவிட்டது. இதை மாற்றி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.

* நகராட்சி அலுவல கத்தில், புரோக்கர்களின் ஆதிக்கம் அதிகளவில் உள்ளது. இவர்களை விரட்டியடிக்க வேண்டும்.

* ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால் பல ரோடுகள் சந்துகளாக மாறிவிட்டது. இவற்றை அகற்ற வேண்டும்.

* மக்கள் பணிக்காக அல்லாமல், கமிஷனுக்காக கட்சி பாகுபாடின்றி கூட்டணி வைத்து மறியல் போராட்டம் செய்த கதை உண்டு. இதையறிந்து மக்களுக்காக மட்டுமே பணியாற்றுவேன் என சபதம் எடுக்க வேண்டும்.

* புது பஸ் ஸ்டாண்டில் வாகன நிறுத்தத்தில் மேற்கூரை அமைக்க வேண்டும்.

* தனியார் மட்டுமே மீன் மார்க்கெட் நடத்துவதற்கு வழி வகுத்துள்ள நகராட்சி, வருவாய் பெருக்க நகராட்சி சார்பில் சுகாதாரமான மீன் மார்க்கெட் நடத்த முன் வரவேண்டும்.

* உணவு விடுதி நடத்துவோர், விடுதியில் உள்ள கழிவுகளை, அவர்களது சொந்த வாகனங்களில், ஊருக்கு வெளியே கொண்டு சென்று கொட்ட வலியுறுத்த வேண்டும்.

* நகராட்சியில் பல ஆண்டுகளாக ஒரே பணியில் நீடிக்கும் பணியாளர்களை இடமாற்றி, லஞ்சத்தை தவிர்த்து ஊழலற்ற நிர்வாகம் நடத்த வேண்டும்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us