/உள்ளூர் செய்திகள்/தேனி/கூட்டுறவு சங்கங்களில் பொதுசேவை மையங்கள்கூட்டுறவு சங்கங்களில் பொதுசேவை மையங்கள்
கூட்டுறவு சங்கங்களில் பொதுசேவை மையங்கள்
கூட்டுறவு சங்கங்களில் பொதுசேவை மையங்கள்
கூட்டுறவு சங்கங்களில் பொதுசேவை மையங்கள்
ADDED : செப் 27, 2011 09:35 PM
தேனி : தேனி மாவட்டத்தில் 19 தொடக்க விவசாய கூட்டுறவு சங்கங்களில் பொதுசேவை மையங்கள் தொடங்கப்பட உள்ளன.
தேனி மாவட்டத்தில் கொடுவிலார்பட்டி, கடமலைக்குண்டு, வள்ளல்நதி, போடி, சீப்பாலக்கோட்டை, சில்லமரத்துப்பட்டி, கம்பம், கோம்பை, ஆண்டிபட்டியில் பொதுச் சேவை மையங்கள் உள்ளன. கூடுதலாக காமயகவுண்டன்பட்டி, க.புதுப்பட்டி, உத்தமபுரம், மல்லிங்காபுரம், லட்சுமிநாயக்கன்பட்டி, பெரிய சிந்தலைச்சேரி, காமாட்சிபுரம், மேலச்சொக்கநாதபுரம், உத்தமபாளையம், கம்பம், போடி நாயக்கனூர், வடபுதுப்பட்டி, லட்சுமிபுரம், நாகலாபுரம், வீரபாண்டி, வெங்கடாசலபுரம், சீலையம்பட்டி, பாலக்கோம்பை, ரெங்கசமுத்திரம் ஆகிய தொடக்க விவசாய கூட்டுறவு சங்கங்களில் பொதுசேவை மையங்கள் தொடங்கப்பட உள்ளன. இங்கு கம்ப்யூட்டர் வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலம் பயிர்க்கடன் வழங்கும் விவசாயிகளுக்கு பட்டா, சிட்டா, ரயில் டிக்கெட், பஸ் டிக்கெட் பெறுவது உட்பட பல்வேறு வசதிகள் செய்யப்படும்.


