Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/விழுப்புரத்தில் வரும் 26ம் தேதி மாவட்ட அளவிலான தடகளப் போட்டி :விளையாட்டு அலுவலர் தகவல்

விழுப்புரத்தில் வரும் 26ம் தேதி மாவட்ட அளவிலான தடகளப் போட்டி :விளையாட்டு அலுவலர் தகவல்

விழுப்புரத்தில் வரும் 26ம் தேதி மாவட்ட அளவிலான தடகளப் போட்டி :விளையாட்டு அலுவலர் தகவல்

விழுப்புரத்தில் வரும் 26ம் தேதி மாவட்ட அளவிலான தடகளப் போட்டி :விளையாட்டு அலுவலர் தகவல்

ADDED : ஆக 22, 2011 12:28 AM


Google News
ழுப்புரம் : விழுப்புரத்தில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வரும் 26ம் தேதி நடக்கிறது.

மாவட்ட விளையாட்டு அலுவலர் பத்மநாபன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்ட அளவில் மாதாந்திர விளையாட்டு போட்டிகள் ஆண், பெண் இரு பாலருக்கும் வரும் 26ம் தேதி நடக்கிறது. விழுப்புரம் அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடக்க உள்ள, இந்த போட்டிகளில் பங்கேற்க வயது வரம்பு கிடையாது. ஆண்கள், பெண்கள் பிரிவில் தனித்தனியே 100 மீ., 200, 400, 800, 1500 மற்றும் 5000 மீ., ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், சங்கிலி குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடக்கிறது. ஒரு நபர் ஏதேனும் மூன்று போட்டிகளில் கலந்து கொள்ளலாம். முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுவோருக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்படும். இது தொடர்பான விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலரை 99403 41462 என்ற மொபைல் எண்ணிலும், தடககளப் பயிற்றுனருக்கு 97906 24588 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us