/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/காலி மண் பானையுடன் வந்த கவுன்சிலர்காலி மண் பானையுடன் வந்த கவுன்சிலர்
காலி மண் பானையுடன் வந்த கவுன்சிலர்
காலி மண் பானையுடன் வந்த கவுன்சிலர்
காலி மண் பானையுடன் வந்த கவுன்சிலர்
ADDED : செப் 07, 2011 12:28 AM
அனுப்பர்பாளையம் : திருப்பூர், 15 வேலம்பாளையம் நகராட்சி பகுதியில்
குடிநீர் வினியோகத்தை சீராக்கக்கோரி, பா.ஜ., கவுன்சிலர் நடராஜ், காலி மண்
பானையுடன் நகராட்சி கூட்டத்துக்கு வந்தார்.
திருப்பூர் மாநகராட்சி 60
வார்டுகளுடன் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. நிர்வாக வசதிக்காக நான்கு
மண்டலங்கள் உருவாக்கப்படுகின்றன. மண்டலங்கள் வரையறை மீது 15 வேலம்பாளையம்
நகராட்சி கவுன்சிலர்களின் கருத்து கேட்பு கூட்டம், துணை தலைவர் சரோஜா
தலைமையில் செயல் அலுவலர் (பொறுப்பு) மல்லிகை முன்னிலையில் நேற்று நடந்தது.
கூட்டம் துவங்கியதும் பா.ஜ., கவுன்சிலர் நடராஜ், காலி மண் பானையை தலையில்
வைத்துக் கொண்டு கூட்டத்துக்கு வந்தார். நகராட்சி பகுதியில் 15 நாட்களுக்கு
ஒருமுறை குடிநீர் வினியோகிக்கப்படு கிறது. பொதுமக்கள் குடிநீருக்காக
அவதிப்படுகின்றனர். எட்டு நாட்களுக்கு ஒருமுறை வினியோகிக்க வேண்டும்,
என்றார். நடவடிக்கை எடுப்பதாக செயல் அலுவலர் உறுதியளித்தார். ராஜேந்திரன்
(தி.மு.க.,): தலைவர் இல்லாமல் கூட்டம் நடத்துவதை கண்டித்து வெளிநடப்பு
செய்கிறோம் என்றார். இதைத்தொடர்ந்து தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு
செய்தனர்.சுப்ரமணியம் (அ.தி.மு.க.,): நகராட்சி வளாகத்தில் முன்னாள்
முதல்வர் எம்.ஜி.ஆர்., சிலை வைக்க தீர்மானம் நிறைவேற்றி, அரசின் அனுமதி பெற
வேண்டும்.நாகராஜ் (ம.தி.மு.க.,): குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்த
வேண்டும்; எட்டு நாட்களுக்கு ஒரு முறை வினியோகிக்க வேண்டும்.பாலசுப்ரமணியம்
(அ.தி.மு.க.,): அண்ணாதுரை சிலையை, அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ., வைத்து
திறப்பு விழா நடத்த வேண்டும். இவ்வாறு, விவாதம் நடந்தது.


