Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/தாயாய் தயை புரியும் காவிரித்தாயைபோற்றி வணங்கும் "ஆடிப்பெருக்கு'

தாயாய் தயை புரியும் காவிரித்தாயைபோற்றி வணங்கும் "ஆடிப்பெருக்கு'

தாயாய் தயை புரியும் காவிரித்தாயைபோற்றி வணங்கும் "ஆடிப்பெருக்கு'

தாயாய் தயை புரியும் காவிரித்தாயைபோற்றி வணங்கும் "ஆடிப்பெருக்கு'

ADDED : ஆக 02, 2011 11:57 PM


Google News
திருச்சி: காவிரித்தாயை போற்றி வணங்கும் வகையில், காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்று (3ம் தேதி) ஆடிப்பெருக்கு உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

தான் செல்லும் இடங்களில் எல்லாம் வளங்களையும், நலங்களையும் அள்ளி கொடுத்து, மக்களுக்கு அருள் புரிபவள் காவிரித்தாய். தாயாக இருந்து தயை செய்யும் காவிரியை வழிபடும் வகையில், ஆண்டுதோறும் ஆடி 18ம் நாள் ஆடிப்பெருக்கு விழாவாக கொண்டாடப்படுகிறது.ஆண்டாண்டு காலமாக 18ம் நாளன்று காவிரி பெருக்கெடுப்பதை போல, ஆடிப்பெருக்கு தினத்தன்று செய்யும் காரியங்கள், முயற்சிகள் பலமடங்கு பலன் தரும் என்பது தமிழக மக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.

காவிரி பாயும் அனைத்து மாவட்டங்களிலும் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டாலும், காவிரி டெல்டா மாவட்டங்களில் அதிக உற்சாகத்துடன் ஆடிப்பெருக்கு விழா சீரும், சிறப்புமாக கொண்டாடப்படும்.இன்று (3ம் தேதி) ஆடிப்பெருக்கையொட்டி, காவிரிக்கரைகளில் கூடும் பெண்கள், புதுமண தம்பதிகள், காவிரித்தாய்க்கு பொங்கலிட்டு, காப்பரிசி, காதோலை- கருகமணி, மஞ்சள் கயிற்றை படையலிட்டு, காவிரிக்கு தீபராதனை காட்டி வழிபடுவர்.புதுமண தம்பதிகள் திருமணத்தன்று அணிந்திருந்த மாலைகளை ஆற்றில் விட்டு, தங்களது கணவருக்கு நீண்ட ஆயுள் வேண்டி வழிபாடு நடத்துவர். தாலிக்கயிறை பெருக்குதல், திருமணம் கைக்கூட இளம்பெண்கள் மஞ்சள் கயிற்றை கழுத்தில் அணிந்து கொள்வர்.ஆடிப்பெருக்கையொட்டி, ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறை, சிந்தாமணி ஓடத்துறை, குடமுருட்டி அய்யாளம்மன் படித்துறை, முக்கொம்பு, கல்லணை உள்பட அனைத்து பகுதிகளில் உள்ள காவிரிக்கரைகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.ஆடிப்பெருக்கன்று காவிரியில் நீராடும் பக்தர்களை கண்காணிக்க, தீயணைப்புத்துறையினர் சார்பில் அம்மா மண்டபத்தில் கண்காணிப்பு மேடை அமைக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றுக்குள், ரப்பர் டியூப்புகளுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.திருட்டு போன்ற அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் வகையில், ஸ்ரீரங்கம் ஏ.சி., வீராசாமி தலைமையில், நூற்றுக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள் ஸ்ரீரங்கத்துக்கு இயங்கப்படுகின்றன. மக்களின் வசதிக்காக குடிநீர், கழிவறை போன்ற சிறப்பு ஏற்பாடுகள் மாநகராட்சி சார்பில் செய்யப்பட்டுள்ளன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us