/உள்ளூர் செய்திகள்/கடலூர்/நெய்வேலியில் வரும் 10ம் தேதி பி.எஸ்.என்.எல்., லோக் அதாலத்நெய்வேலியில் வரும் 10ம் தேதி பி.எஸ்.என்.எல்., லோக் அதாலத்
நெய்வேலியில் வரும் 10ம் தேதி பி.எஸ்.என்.எல்., லோக் அதாலத்
நெய்வேலியில் வரும் 10ம் தேதி பி.எஸ்.என்.எல்., லோக் அதாலத்
நெய்வேலியில் வரும் 10ம் தேதி பி.எஸ்.என்.எல்., லோக் அதாலத்
ADDED : செப் 06, 2011 10:27 PM
கடலூர் : நெய்வேலி சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் பி.எஸ்.என்.
எல்., சார்பில் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) வரும் 10ம் தேதி நெய்வேலியில் நடக்கிறது. பி.எஸ்.என்.எல்., கடலூர் தொலைத் தொடர்பு மாவட்ட முதுநிலை பொது மேலாளர் மார்ஷல் ஆண்டனி லியோ விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பி.எஸ்.என்.எல்., தொலைப்பேசியை பயன்படுத்தி கட்டண பாக்கி வைத்துள்ள நெய்வேலி டவுன் ஷிப், மந்தாரக்குப்பம், வடலூர் மற்றும் குறிஞ்சிப்பாடி பகுதி சந்தாதாரர்கள் சமரச அடிப்படையில் நிலுவைத் தொகை கட்டுவதற்கு வசதியாக நெய்வேலி வட்ட நீதிமன்ற சட்டப் பணிகள் குழு சார்பில் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) வரும் 10ம் தேதி, வட்டம் 20ல் உள்ள சார்பு நீதிமன்ற வளாகத்தில் நடக்கிறது. சட்டப்பணிகள் குழு சார்பில் ஏற்கனவே கடிதம் அனுப்பப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்கள் பங்கேற்று நிலுவைத் தொகையை சமரச அடிப்படையில் செலுத்தி வழக்கை எதிர்கொள்வதை தவிர்க்கவும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


