/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/காங்கிரசை தோற்கடிக்க காங்.,காரர்களே போதும்காங்கிரசை தோற்கடிக்க காங்.,காரர்களே போதும்
காங்கிரசை தோற்கடிக்க காங்.,காரர்களே போதும்
காங்கிரசை தோற்கடிக்க காங்.,காரர்களே போதும்
காங்கிரசை தோற்கடிக்க காங்.,காரர்களே போதும்
ADDED : அக் 07, 2011 10:33 PM
சிவகாசி : ''காங்கிரசை தோற்க வைக்க, காங்கிரஸ் கட்சிகாரர்களேபோதும்,'' என, அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் ராஜேந்திரபாலாஜி பேசினார்.சிவகாசியில் அ.தி.மு.க., சார்பில் நகராட்சி தலைவர், கவுன்சிலர்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது.
நகர செயலாளர் அசன் பதுரூதீன் தலைமை வகித்தார். முன்னாள் செயலாளர்கள் பிச்சைகனி, சமுத்திர பாண்டியன், கந்தசாமி, பேரவை மாவட்ட செயலாளர் திருமுருகன், அவைத்தலைவர் குருசாமி முன்னிலை வகித்தனர்.நகராட்சி வேட்பாளர் கதிரவன் மற்றும் கவுன்சில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து மாவட்ட செயலாளர் ராஜேந்திரபாலாஜி எம்.எல்.ஏ., பேசியதாவது: தி.மு.க., ஆளும் கட்சியாக இருந்த காலத்திலே சிவகாசி தொகுதியில் 35 ஆயிரம் ஒட்டு வித்தியாசத்தில் அ.தி.மு.க., வெற்றி பெற்றது. இன்று தி.மு.க., அதிகார பலம் இழந்து, சிறைக்கு சென்று கொண்டிருகின்றனர். நமக்கு களத்தில் எதிரியே இல்லை. காங்கிரஸ் வேட்பாளர் தோல்வியை காங்கிரஸ்காரர்களே பார்த்து கொள்வார்கள். தி.மு.க.,வின் தோல்வியை தி.மு.க., தொண்டர்களே செய்து விடுவார்கள். அவர்களுக்குள் 2வது இடத்தை யார்பிடிப்பது என்பதில்தான் போட்டி உள்ளது. அ.தி.மு.க..,வில்தான் போட்டி, பொறாமை இல்லை. வெற்றி ஒன்றுதான் குறிக்கோளாக செயல்பட வேண்டும். கடந்த தேர்தலில் நம்மை சுற்றி வந்து வெற்றி பெற்றவர்கள், இன்று நமது காலை கடிக்க பார்க்கிறார்கள். அவர்களை தூக்கி எறிந்து விடவேண்டும். எல்லா கட்சிகளும் நிலைகுலைந்து உள்ளன. சிவகாசி வரலாற்றை மாற்றி எழுத வேண்டும், என்றார்.


