ADDED : ஆக 28, 2011 12:34 AM
கோவை : கோவை அரசு கலைக் கல்லூரியில் எம்.காம்., எம்.எஸ்.சி., தாவரவியல் படிப்பில் ஒரு இடம், எம்.எஸ்.சி., கணித படிப்பில் இரண்டு இடங்கள், புவியியல் படிப்பில் இரண்டு இடங்கள், வேதியியல் படிப்பில் மூன்று இடங்கள், எம்.ஏ., வரலாறு படிப்பில் ஏழு இடங்கள், பொருளாதாரம் படிப்பில் 20 இடங்கள், பொது நிர்வாகம் படிப்பில் 13 இடங்கள், தமிழ் படிப்பில் நான்கு இடங்கள் காலியாக உள்ளன.விண்ணப்பிக்க தகுதியுள்ள மாணவர்கள், சான்றிதழ்களுடன் வரும் 30ம் தேதி கல்லூரிக்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வர்(பொ) துரை தெரிவித்தார்.


