மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் லிண்ட்சே லோஹன்
மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் லிண்ட்சே லோஹன்
மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் லிண்ட்சே லோஹன்
ADDED : செப் 19, 2011 11:40 AM

'தி மீன் கர்ல்ஸ்' என்ற படத்தின் மூலம் பிரபலமான, ஹாலிவுட் நடிகை லிண்ட்ஸே லோஹன் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். சர்ச்சையையும் - லிண்ட்சேவையும் பிரிக்க முடியாது எனக் கூறும் அளவிற்கு போதை மருந்து பயன்பாடு, போலீஸ் கஸ்டடி, சிறைவாசம் என ஏதாவது சர்ச்சையில் சிக்கிக் கொண்டே இருக்கும் நடிகை லிண்ட்சே லேட்டஸ்டாக சிக்கியுள்ளது போட்டோகிராபரை தாக்கிய விவகாரத்தில்.
நியூயார்க் பேஷன் வீக் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லிண்ட்சே லோஹன், தன்னை போட்டோ எடுத்த ஒரு போட்டோகிராபர் முகத்தில் விஸ்கியை ஊற்றினார். இதைப் பார்த்து கூட்டத்தில் இருந்த அனைவரும் சற்று அதிர்ந்து போயினர். வேகமாக லிண்ட்ஸேவின் அநாகரிக செய்கை பற்றிய விஷயம் இன்டரநெட்டில் பரவியது. மேலும் கண்ணாடி டம்ப்ளரையும் அந்த போட்டோகிராபர் மீது தூக்கி எறிந்துள்ளார்.அதிர்ஷ்டவசமாக அந்த புகைப்படக்காரருக்கு எந்த வித காயமும் ஏற்படவில்லை.


