/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/குற்றாலம் பகுதியில் விவசாய பணிகள் தீவிரம்குற்றாலம் பகுதியில் விவசாய பணிகள் தீவிரம்
குற்றாலம் பகுதியில் விவசாய பணிகள் தீவிரம்
குற்றாலம் பகுதியில் விவசாய பணிகள் தீவிரம்
குற்றாலம் பகுதியில் விவசாய பணிகள் தீவிரம்
ADDED : ஆக 01, 2011 01:59 AM
குற்றாலம் : குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய பணிகள்
தீவிரமடைந்து வருகிறது.கடந்த 15 நாட்களுக்கு முன் விவசாயத்திற்கு போதுமான
மழை பெய்யாததாலும், குளங்கள் வறண்ட நிலையில் காணப்பட்டதாலும் குற்றாலம்
மற்றும் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் உழவு பணி, விதை விதைக்கும் பணி,
நடுவை பணி போன்றவைகளை மேற்கொள்ள முடியாமல் ஆழ்ந்த கவலையில் இருந்து
வந்தனர்.தற்போது கடந்த 15 தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்
தொடர்ந்து பெய்து வருவதால் குற்றாலம், ஐந்தருவி, காசிமேஜர்புரம், இலஞ்சி,
ஆயிரப்பேரி, மத்தளம்பாறை ஆகிய ஊர்களில் உள்ள குளங்களுக்கு போதிய தண்ணீர்
வந்து கொண்டிருப்பதால் குளங்கள் விரைவாக நிரம்ப துவங்கியுள்ளது.
இதனால்
விவசாயிகள் மகிழ்ச்சியுடன் விவசாய பணிகளை மேற்கொண்டு தற்போது மருந்து
தெளித்தல், உரமிடுதல் போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.