/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/புளியங்குடி அருகே பெண்ணிடம் செயின் பறிப்புபுளியங்குடி அருகே பெண்ணிடம் செயின் பறிப்பு
புளியங்குடி அருகே பெண்ணிடம் செயின் பறிப்பு
புளியங்குடி அருகே பெண்ணிடம் செயின் பறிப்பு
புளியங்குடி அருகே பெண்ணிடம் செயின் பறிப்பு
ADDED : செப் 30, 2011 02:26 AM
புளியங்குடி : புளியங்குடி அருகே நேற்று அதிகாலையில் நடை பயிற்சி சென்ற பெண்ணிடம் செயின் பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
புளியங்குடி அருகேயுள்ள டி.என்.புதுக்குடி செல்வவிநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி கோமதி (46). இவர் நேற்று காலை தனது வீட்டிலிருந்து தென்காசி சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். நடைபயிற்சி முடிந்து திரும்பி வந்து கொண்டிருந்த போது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே பைக்கில் நின்று கொண்டிருந்த மர்ம நபர்கள் திடீரென வந்து கோமதியின் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 46 கிராம் எடை கொண்ட தங்க செயினை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் சென்றனர்.
திடீரென வந்து நகையை பறித்துச் சென்றதால் கோமதியின் கழுத்தில் நககீறல்கள் ஏற்பட்டது. பின்னர் இச்சம்பவம் குறித்து புளியங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.