மியூசிக் ஆல்பத்தில் நடிக்கிறார் கட்ரீனாகைப்!
மியூசிக் ஆல்பத்தில் நடிக்கிறார் கட்ரீனாகைப்!
மியூசிக் ஆல்பத்தில் நடிக்கிறார் கட்ரீனாகைப்!
UPDATED : அக் 01, 2011 04:23 PM
ADDED : அக் 01, 2011 04:22 PM

பாலிவுட்டின் ராசியான நடிகை என்ற புகழைக் கொண்ட நடிகை கட்ரீனா கைப், விரைவில் மியூசிக்கல் ஆல்பம் ஒன்றில் நடிப்பார் என தெரிகிறது. மேரே பிரதர் கி துல்ஹன் என்ற படத்தில் நடித்துள்ளார் கட்ரீனா கைப். இந்த திரைப்படம் வசூலை அள்ளிக் குவித்துள்ளது. இத்திரைப்படத்தில் அலி ஜாபர் என்ற நடிகரும் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பின் போது, விளையாட்டாக கட்ரீனா கைபும், அலி ஜாபரும் பேசிக் கொண்டிருந்த போது, படம் வசூலில் சாதனை படைத்தால் நீங்கள் தயாரிக்கும் மியூசிக்கல் ஆல்பத்தில் நான் நடிக்கிறேன் என தெரிவித்திருக்கிறார் கட்ரீனா கைப்.
விளையாட்டாக பேசிக்கொள்ள, படம் என்னவோ வசூலில் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி விட்டது. இதனையடுத்து கட்ரீனா கைப் சொன்னதைச் செய்வார், எனக்கு வாக்குறுதி அளித்தது போல் மியூசிக்கல் ஆல்பத்தில் நடித்துக் கொடுப்பார் என நம்புகிறேன். ஆனால் அவரை நான் வற்புறுத்த மாட்டேன் என தெரிவித்துள்ளார் அலி ஜாபர்.


