Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோவையில் ஜெ., விஜயகாந்த் ஒரே நாளில் பிரசாரம்!

கோவையில் ஜெ., விஜயகாந்த் ஒரே நாளில் பிரசாரம்!

கோவையில் ஜெ., விஜயகாந்த் ஒரே நாளில் பிரசாரம்!

கோவையில் ஜெ., விஜயகாந்த் ஒரே நாளில் பிரசாரம்!

ADDED : அக் 12, 2011 02:54 AM


Google News
கோவை : உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா, கோவை, திருப்பூரில் நாளை மறுநாள் (அக்., 14) பிரசாரம் செய்யவுள்ளார்.கோவை மேயர் மற்றும் கவுன்சிலர் பதவிகளுக்கு 7 முனைப்போட்டி நிலவுகிறது.

இதனால், போட்டியும் கடுமையாகவுள்ளது. அரசியல் கட்சிகள் தனித்தனியே களம் காண்பதால், தங்களின் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம், கட்சித்தலைமைக்கும், தொண்டர்களுக்கும் உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் என்பதால், களப்பணியில் வேட்பாளர்கள் கவனம் செலுத்துகின்றனர்.ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ, மா.கம்யூ., மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், தே.மு. தி.க., சார்பில் பிரேமலதா, தமிழக காங்., கமிட்டித்தலைவர் தங்கபாலு ஆகியோர், கோவையில் பிரசாரத்தை முடித்து விட்டனர்.பா.ஜ., மாநிலத் தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், இன்று மாலை 5.00 மணிக்கு சாய்பாபா காலனியில் தனது பிரசாரத்தைத் துவக்குகிறார். தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், வரும் 14ம் தேதி, காலை 9.00 மணிக்கு துடியலூரில் பிரசாரத்தைத் துவக்கி, கணபதி, ஆத்துப்பாலம் ஆகிய இடங்களில் பேசிவிட்டு, பொள் ளாச்சி செல்கிறார். இந்திய கம்யூ., தலைவர்கள் தா.பாண்டியன், சி.மகேந்திரன் ஆகியோர், கோவைக்கு பிரசாரம் செய்ய வரவுள்ளனர்; தேதி, நேரம் முடிவாகவில்லை. அக்கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, சூலூர் கண்ணம்பாளையத்தில் வரும் 16ம் தேதி பிரசாரம் செய்யவுள்ளார். மா.கம்யூ., தலைவர்கள் வரதராஜன், டி.கே.ரங்கராஜனும் கோவைக்கு பிரசாரம் செய்ய வரவுள்ளனர்.மற்ற கட்சிகளின் தலைவர்கள் பலரும், பிரசாரம் செய்துவரும் நிலையில், முக்கியக் கட்சிகளான அ.தி. மு.க., மற்றும் தி.மு.க., தலைவர்களின் பிரசார பயணங்கள், இறுதி செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில், அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில், கோவையில் வரும் 14ம் தேதி முதல்வர் ஜெயலலிதா, பிரசாரம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அன்@ற திருப்பூரிலும் அவர் பிரசாரம் செய்வார் என கட்சியினர் தெரிவித்தனர்அக்., 14 மதியம் 2.00 மணியளவில், சிவானந்தா காலனியில் அவர் பிரசாரம் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், வாகன பிரசாரமா அல்லது மேடை பிரசாரமா என்பதை நேற்று இரவு வரையிலும், கட்சி நிர்வாகிகள் உறுதி செய்யவில்லை. தி.மு.க., சார்பில் மட்டுமே, இதுவரை யாரும் கோவைக்கு பிரசாரத்துக்கு வரவில்லை; இனியும் வருவார்களா என்பதும் கட்சி நிர்வாகிகளுக்குத் தெரியவில்லை. பிரசாரம் முடிவதற்கு, இன்னும் 4 நாட்களே மீதமிருக்கும்நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கோவையை முற்றுகையிடுவதால், உள்ளாட்சித்தேர்தல் பிரசாரம் உச்ச கட்ட சூட்டை எட்டியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us