/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/அரசு மருத்துவமனையில்தற்கொலை தடுப்பு முகாம்அரசு மருத்துவமனையில்தற்கொலை தடுப்பு முகாம்
அரசு மருத்துவமனையில்தற்கொலை தடுப்பு முகாம்
அரசு மருத்துவமனையில்தற்கொலை தடுப்பு முகாம்
அரசு மருத்துவமனையில்தற்கொலை தடுப்பு முகாம்
ADDED : செப் 08, 2011 03:02 AM
ஈரோடு: ஈரோடு அரசு மருத்துவமனையில், தன்வந்திரி நர்ஸிங் கல்லூரி சார்பில்,
தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.அரசு மருத்துவமனை
கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் பேசுகையில், ''அரசு மருத்துவமனையில்
செயல்படும் மன நலப் பிரிவில், 2011 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 437 பேருக்கு
சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.தற்கொலை முயற்சியில் அவசர சிகிச்சை பிரிவில்
சேர்க்கப்படுவோருக்கு, மன நலப் பிரிவு சார்பில் இலவச ஆலோசனை
வழங்கப்படுகிறது,'' என்றார்.
மன நலப் பிரிவு டாக்டர் ஆனந்த குமார் பேசுகையில், ''18 முதல் 25 வயது இளைஞர்களிடம் அதிகளவில் தற்கொலை எண்ணம் மேலோங்குகிறது.
வீடு, அலுவலகம், சமுதாயம் என பல வழிகளிலும், மன அழுத்தத்துக்கு ஆளாவதால்,
மனதில் தற்கொலை எண்ணம் எழுகிறது. தற்கொலை எண்ணத்தை கைவிட, அரசு
மருத்துவமனையில் ஆலோசனை வழங்கப்படுகிறது,'' என்றார்.கல்லூரி முதல்வர்
அர்விந்த்பாபு, மனநல பிரிவு டாக்டர் முனிராஜ், மன நல பிரிவு ஊழியர்கள்
வனஜா, செந்தில்குமார், கவிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


