மதுரை : குலாலர் கல்வி மேம்பாட்டு கழகத்தின் 29ம் ஆண்டு விழா மதுரையில் நடந்தது.
மாநில தலைவர் வீரப்பன் தலைமை வகித்தார். உதவி பேராசிரியர் நாகராணி துவக்கினார். தீர்மானம்: குலாலர் சமுதாய மாணவர்கள் வளர்ச்சிக்காக அரசு சார்பில் நிதியுதவி. அரசு வேலை வாய்ப்பில் மூன்று சதவீதம் இட ஒதுக்கீடு. மண்பாண்டம் செய்ய களிமண் எடுக்கும் நிலங்களை ஒதுக்கித்தருதல். மண்பாண்டம் தொழில் செய்து வரும் இடங்களை தொழிலாளர்களுக்கென பட்டா வழங்குதல் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேறின.