/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/உழவர் மன்ற அமைப்பாளர்களுக்கான பயிற்சிஉழவர் மன்ற அமைப்பாளர்களுக்கான பயிற்சி
உழவர் மன்ற அமைப்பாளர்களுக்கான பயிற்சி
உழவர் மன்ற அமைப்பாளர்களுக்கான பயிற்சி
உழவர் மன்ற அமைப்பாளர்களுக்கான பயிற்சி
ADDED : ஜூலை 24, 2011 01:20 AM
தூத்துக்குடி : கோவில்பட்டி வட்டார உழவர் மன்ற அமைப்பாளர்களுக்கான பயிற்சி தூத்துக்குடி உழவர் பயிற்சி நிலையம் மூலமாக கோவில்பட்டி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நடந்தது.பயிற்சியில் தூத்துக்குடி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஜோசப் கருணாநிதி கலந்து கொண்டு பயறுவகைகள் மற்றும் சிறுதானியங்களின் மகசூலை அதிகரிக்க வேண்டியதின் அவசியத்தை விளக்கினார்.
மேலும் சொட்டு நீர்ப்பாசன முறைகளை அனைத்து தோட்டக்கால் விவசாயிகளும் கடைப்பிடிக்க வேண்டியதின் அவசியத்தையும் விள க்கினார். உழவர் பயிற்சி நிø லய வேளாண்மை துணை இயக்குநர் குருமூர் த்தி பயறு சாகுபடி தொ ழில் நுட்பங்களையும், தோட்டக்கலை உதவி இயக்குநர் ராஜ்மார், இயற்கை விவசாயம் பற்றியும், வேளாண்மை அலுவலர் பூவண்ணன் திருந்திய நெல்சாகுபடி பற்றியும் விளக்கினார். கோவில்பட்டி வேளாண்மைஅலுவலர்பாலமுருகன் பயிற்சியில் கலந்து கொண்ட அனைத்து உழவர் மன்ற அமைப்பாளர்களுக்கும் மக்காச்சோள விதை மினிகிட் இலவசமாக வழங்கினார். பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு நஞ்சில்லா வேளாண்மை என்ற புத்தகம் வழங்கப்பட்டது. பயிற்சிக்கான ஏற்பாடுகளை கோவில்பட்டி நடமாடும் மண்பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர்கள் முருகப்பன் மற்றும் சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.


