ADDED : செப் 14, 2011 04:18 AM
சிவகாசி : சிவகாசியில் பெய்த மழையால் வீடுகளில் கழிவு நீர் புகுந்தது.
சிவகாசியில் நேற்று பிற்பகல் முதல் மாலை வரை மழை பெய்தது. சிவகாசி ஒன்றியம், பள்ளபட்டி ஊராட்சி 2வது வார்டு முத்துராமலிங்கபுரம் காலனியில் மழை நீர் செல்ல வழியில்லாமல் வீடுகளில் முன்பு தேங்கியது. இப்பகுதியில் உள்ள சோனையாபுரம், பர்மாகாலனி, காமராஜபுரம், நேஷனல் காலனி பகுதியில் மழைநீருடன் கழிவு நீர் சேர்ந்து, முத்துராமலிங்கம்புரம் காலனி வாறுகால் வழியாக கடம்பன்குளத்தில் வந்து சேரும். வாறுகால் முறையாக சுத்தம் செய்யததால், பலரும் தங்கள் வீடுகளில் முன்பு வாறுகாலை அடைத்து விட்டனர். இதனால் கழிவு நீர் கடந்து செல்ல வழியில்லை. லேசான மழை பெய்தாலும் கழிவு நீர் வீடுகளுக்குள் புகுகிறது. நேற்று பெய்த மழையில் இங்குள்ள தீப்பெட்டி ஆலையில் மழைநீருடன், கழிவு நீரும் புகுந்தது. இதனால் தொழிலாளர்கள் வேலை செய்ய முடியாமல் வெளியேறினர். முத்துராமலிங்கபுரம் காலனி தெருவில் உள்ள 20க்கும் மேற்பட்ட வீடுகள் முன்பு மழைநீர் தேங்கியது.