/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை: பெரம்பலூர் கலெக்டர் துவக்கி வைப்புகோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை: பெரம்பலூர் கலெக்டர் துவக்கி வைப்பு
கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை: பெரம்பலூர் கலெக்டர் துவக்கி வைப்பு
கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை: பெரம்பலூர் கலெக்டர் துவக்கி வைப்பு
கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை: பெரம்பலூர் கலெக்டர் துவக்கி வைப்பு
ADDED : அக் 09, 2011 12:14 AM
பெரம்பலூர்: வான்முகில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனையை பெரம்பலூர் கலெக்டர் தரேஸ் அஹமது துவக்கி வைத்து பேசியதாவது:பெரம்பலூர் உட்பட 6 மாவட்டங்களை உள்ளடக்கிய தஞ்சாவூர் கோ-ஆப்டெக்ஸ் மண்டலத்தில் உள்ள மொத்தம் 19 விற்பனை நிலையங்களுக்கு 2011-2012 ஆம் ஆண்டிற்கு 77 கோடி ரூபாய் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் விற்பனை நிலையத்திற்கு தீபாவளி பண்டிகைக்கு 28 லட்சம் ரூபாய் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக புதிய ரகங்கள் உற்பத்தி பகுதியிலுள்ள நெசவாளர் கூட்டுறவு சங்கங்களிலிருந்து நேரடியாக பெறப்படுகிறது.தீபாவளி சிறப்பு விற்பனை செப்., 15ம் தேதி முதல் நவ., 5ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த சிறப்பு விற்பனை காலத்தில் கைத்தறி, பட்டு, ரெடிமேட் உள்ளிட்ட ரகங்களுக்கு 30 சதம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. மேலும் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும், அரசு சார்பு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு கடன் விற்பனை வசதியும் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் அரசு பணியாளர்கள் தங்கள் ஒரு மாத அடிப்படை சம்பளம் அளவிற்கு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் கடன் விற்பனையில் தேவையான துணி ரகங்களை வாங்கிக்கொள்ளலாம். பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் மாதந்திர சேமிப்பு திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் பொதுமக்கள் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி வந்தால் பொதுமக்கள் ஒன்பது மாத காலம் செலுத்திய தொகையோடு 10வது மாத தவணையை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் இலவசமாக தந்து அதற்குரிய துணிகளை பெற்றுக்கொள்ளும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கா-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் ஆø ட வகைகளை வாங்கி கூட்டுறவு சங்கங்களின் வளர்ச்சிக்கும் அதன் மூலம் நெசவாளர்களின் வாழ்க்கைக்கும் உதவ வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


