Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/குரூப் 2 : பணி நியமனம் செய்யாததால் 1,800 பேர் தவிப்பு

குரூப் 2 : பணி நியமனம் செய்யாததால் 1,800 பேர் தவிப்பு

குரூப் 2 : பணி நியமனம் செய்யாததால் 1,800 பேர் தவிப்பு

குரூப் 2 : பணி நியமனம் செய்யாததால் 1,800 பேர் தவிப்பு

ADDED : ஆக 19, 2011 01:40 AM


Google News

விருதுநகர் : தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வில் தேர்வு பெற்று பணி நியமனம் செய்யப்படாததால் 1,800 பேர் தவித்து வருகின்றனர்.

கடந்த 2009 ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி.,யால் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1,623 பணியிடங்களுக்கு 2010 ஏப். 11 ல் தேர்வு நடந்தது. இதில், 4.30 லட்சம் பேர் எழுத்து தேர்வு எழுதினர். இதில், 2011 ஜன. 11 ல் தேர்வு முடிகள் வெளியிடப்பட்டு 1,800 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு 2011 பிப். 2 முதல் மார்ச் 28 வரை நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஆறு மாதங்களாகியும் பணிநியமனம் செய்யப்படவில்லை. தலைமை செயலகத்தில் உள்ள உதவியாளர்கள் பணி உயர்வு மூலம் உதவி செக்ஷன் அலுவலர்களாக நியமிக்கப்பட வேண்டிய சதவீதம் நேரடி பணி நியமனத்தால் பாதிக்கப்படுவதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளனர். இதன் காரணமாக ஒட்டுமொத்த பணியிடங்களையும் நியமனம் செய்யப்படாமல் காலதாமதம் செய்யப்பட்டு வருகிறது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விட்டதே என தேர்வு செய்யப்பட்டவர்கள் தவித்து வருகின்றனர். பிரச்னைக்குரிய பணியிடங்களை விட்டு விட்டு மற்ற பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us