/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/நிலமோசடி புகார்; ரியல் எஸ்டேட் அதிபர் கைதுநிலமோசடி புகார்; ரியல் எஸ்டேட் அதிபர் கைது
நிலமோசடி புகார்; ரியல் எஸ்டேட் அதிபர் கைது
நிலமோசடி புகார்; ரியல் எஸ்டேட் அதிபர் கைது
நிலமோசடி புகார்; ரியல் எஸ்டேட் அதிபர் கைது
ADDED : ஆக 09, 2011 02:49 AM
கோவை : தவணை முறையில் வீட்டுமனை விற்பனை செய்து, மோசடி செய்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.சிங்காநல்லூர், தெற்கு வெள்ளாளர் வீதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (44).
1996ல், தனது சேமிப்பைக் கொண்டு, அவிநாசிரோடு,சிவசக்தி ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் நான்கு சென்ட் பெற முன்பதிவு செய்தார். முன்பணமாக 15 ஆயிரம் ரூபாய் செலுத்தி, மாதம் 1,113 ரூபாய் செலுத்தவும் உடன்பாடு ஏற்பட்டது.
நான்கு சென்ட் நிலத்துக்காக 59 ஆயிரத்து 504 ரூபாய் செலுத்திய நிலையில், நிலத்தை கிரயம் செய்து கொடுக்கக் கேட்டபோது, பத்திரப்பதிவுக்கான தொகையை பெற்றுக் கொண்டார்.ஆனாலும், கிரயம் செய்து தராமல் தாமதம் செய்தார். சந்தேகத்தில் விசாரித்தபோது 2006ல், ரவிச்சந்திரனுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை வாசுதேவன் என்பவருக்கு விற்பனை செய்தது கண்டு பிடிக்கபப்பட்டது.இந்த மோசடி பற்றி கோவை மாநகர் மத்திய குற்றப்பிரிவின் கீழ் செயல்படும் நில அபகரிப்பு தடுப்புப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. உதவி கமிஷனர் செல்வராஜ் தலைமையிலான குழு விசாரித்து காளப்பட்டி, ஸ்ரீநகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் பாஸ்கரன் (51) கைது செய்யப்பட்டார்.கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பாஸ்கரன் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


