ADDED : ஜூலை 23, 2011 11:38 PM
காட்டுமன்னார்கோவில் : சிதம்பரம் அருகே பழையநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியை சேர்ந்த 6, 7, 8ம் வகுப்பு மாணவ, மாணவிகள் களப்பயணம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
சிதம்பரம் அருகே முத்தான் பிள்ளை சாவடியில் உள்ள ஜி.ஆர்., மூலிகை பண்ணைக்கு அழைத்து செல்லப்பட்ட மாணவர்களுக்கு டாக்டர் குருநாதன் மூலிகை மருத்துவம் குறித்து விளக்கம் அளித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் வரதராஜன், பட்டதாரி ஆசிரியர்கள் கற்பகம், சுபஸ்ரீ ஆகியோர் மாணவ, மாணவிகளை வழி நடத்தி சென்றனர்.