/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ஊட்டியில் ரோஜா கூட்டம் சுற்றுலா பயணிகள் வியப்புஊட்டியில் ரோஜா கூட்டம் சுற்றுலா பயணிகள் வியப்பு
ஊட்டியில் ரோஜா கூட்டம் சுற்றுலா பயணிகள் வியப்பு
ஊட்டியில் ரோஜா கூட்டம் சுற்றுலா பயணிகள் வியப்பு
ஊட்டியில் ரோஜா கூட்டம் சுற்றுலா பயணிகள் வியப்பு
ADDED : அக் 05, 2011 10:37 PM
ஊட்டி : ஊட்டியில் இரண்டாவது சீசன் களை கட்டியுள்ளது. ரோஜா பூங்காவில் ஆயிரக்கணக்கான ரோஜாக்கள் மலர்ந்துள்ளதால், அவற்றை கண்டு சுற்றுலா பயணிகள் வியந்து செல்கின்றனர்.
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் இரண்டாவது சீசன் களை கட்டியுள்ள நிலையில், சுற்றுலா மையங்கள் அனைத்தும் பொலிவுடன் தயார்படுத்தப்பட்டுள்ளன. தாவரவியல் பூங்காவில், ரோஜா பூங்கா, படகு இல்லம் உட்பட மாவட்டத்தின் அனைத்து சுற்றுலா மையங்களும்
வண்ண மயமாக
காட்சியளிக்கின்றன.
ஆயுத பூஜை விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்துள்ளனர். இதனால், தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலை சிகரம், ரோஜா பூங்கா உள்ளிட்ட
சுற்றுலா ஸ்தலங்கள் களை கட்டியுள்ளன.
இரண்டாவது சீசனுக்காக ஊட்டி ரோஜா பூங்காவில் ஆயிரக்கணக்கான ரோஜா மலர்கள் மலர்ந்துள்ளன. இதை காணும் சுற்றுலா பயணிகள் வியந்து செல்கின்றனர்.


