ADDED : அக் 04, 2011 04:45 PM
கடலூர்: திருமணம் செய்ய மறுத்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில், வாலிபர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் செஷன்ஸ் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தையடுத்த ஈருடையான்மேட்டைச் சேர்ந்தவர் அந்தோணி இருதயராஜ் (27). இவரும், கடலூர் பச்சையாங்குப்பத்தைச் சேர்ந்த இந்துமதி (20) என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இந்நிலையில், அந்தோணியை திருமணம் செய்ய இந்துமதி மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்தோணி, இந்துமதியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுள்ளார். இவ்வழக்கு கடலூர் செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி அந்தோணிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். சங்கராபுரத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றதாக அந்தோணி ஏற்கனவே ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


