பட்டு விவசாயிகளுக்கு மானிய அறிவிப்பு சட்டசபை கூட்டத்தொடரில் வெளியாகும்?
பட்டு விவசாயிகளுக்கு மானிய அறிவிப்பு சட்டசபை கூட்டத்தொடரில் வெளியாகும்?
பட்டு விவசாயிகளுக்கு மானிய அறிவிப்பு சட்டசபை கூட்டத்தொடரில் வெளியாகும்?
உடுமலை: 'பட்டு வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக, 31 கோடி ரூபாய் அளவுக்கு, திட்ட முன்மொழிவுகள் பெறப்பட்டு, அரசின் பரிசீலனையில் உள்ளன,'' என்று உடுமலையில் நடந்த கருத்தரங்கில், அமைச்சர் சண்முகவேல் பேசினார்.
பட்டு விவசாயிகள் கலந்துரையாடல் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, நேற்று உடுமலை ஜி.வி.ஜி., கலையரங்கத்தில் நடந்தது.
உடுமலை, கோவை, கோபிச்செட்டிபாளையம் பகுதி விவசாயிகள், பட்டுத்தொழிலில் முன்னுதாரணமாக விளங்குகின்றனர். இப்பகுதி விவசாயிகள் நடைமுறைப்படுத்தும், நவீன பட்டுத்தொழில் நுட்பங்களை நேரில் கண்டு, தமது பகுதியில் செயல்படுத்துவதற்காக, தமிழகத்தின் பிற பகுதியிலிருந்து, பட்டு விவசாயிகள் வருகின்றனர். கர்நாடகா, ஆந்திர மாநில துறை உயர் அலுவலர்கள், விவசாயிகளும் உடுமலை, பொள்ளாச்சி, கோபிக்கு பயிற்சி பெற வருகின்றனர். நடப்பாண்டில், தமிழகத்தில் பட்டு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தவும், விவசாயிகள், பட்டு நூற்பாளர்கள், நெசவாளர்களுக்கு மானிய உதவிகள் வழங்கவும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் 31 கோடி ரூபாய் அளவுக்கு, திட்ட முன்மொழிவுகள் பெறப்பட்டு, அரசின் பரிசீலனையில் உள்ளன. அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளைப் பயன்படுத்தி, தமிழகத்தை பட்டு உற்பத்தியில் முதல் மாநிலமாக செய்வதற்கு, ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அமைச்சர் சண்முகவேலு பேசினார். கூட்டத்தில், உடுமலை எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், பட்டு வளர்ச்சித்துறை அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.