/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மேல்மலையனூர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் : 2 லட்சம் பக்தர்கள் திரண்டதால் கடும் நெரிசல்மேல்மலையனூர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் : 2 லட்சம் பக்தர்கள் திரண்டதால் கடும் நெரிசல்
மேல்மலையனூர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் : 2 லட்சம் பக்தர்கள் திரண்டதால் கடும் நெரிசல்
மேல்மலையனூர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் : 2 லட்சம் பக்தர்கள் திரண்டதால் கடும் நெரிசல்
மேல்மலையனூர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் : 2 லட்சம் பக்தர்கள் திரண்டதால் கடும் நெரிசல்
ADDED : ஆக 01, 2011 02:52 AM
செஞ்சி : மேல் மலையனூர் அங்காளம்மன் கோவிலில், ஆடி அமாவாசையை முன்னிட்டு, நள்ளிரவில் பக்தர்கள் குவிந்தனர்.
கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், 6 கி.மீ., தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. விழுப்புரம் மாவட்டம் மேல் மலையனூர் அங்காளம்மன் கோவிலில், ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவம், நேற்று முன்தினம் இரவு நடந்தது. ஆடி அமாவாசையுடன், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. இரவு 9 மணி முதல் 9.30 மணிவரை, திடீரென மழை கொட்டியது. மீண்டும் மழை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டதால், இரவு 12 மணிக்கு துவங்கும் ஊஞ்சல் உற்சவத்தை, 11.30க்கு துவங்கி 12.30 மணிக்கு முடித்தனர். சிறப்பு அலங்காரத்தில், ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளிய அங்காளம்மனுக்கு, பக்திப் பாடல்களும் தாலாட்டுப் பாடல்களும் பாடி, உற்சவம் நடத்தினர். இதில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள், கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவதற்குள்ளாக, மேலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள், வந்த வண்ணம் இருந்தனர். இவர்களின் வாகனங்களால் வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து பஸ்கள் வரும், கொடுக்கன்குப்பம், சிறுதலைப்பூண்டி, அவலூர்ப்பேட்டை சாலைகளில், வாகன நெரிசல் ஏற்பட்டது. சென்னை, புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து, வளத்தி வழியாக மேல் மலையனூர் செல்லும் சாலையில், இரவு 12 மணி முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேல் மலையனூரில் இருந்து வளத்தி வரையிலான, 6 கி.மீ., தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்துநின்றன.