/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ராஜா தேசிங்கு கல்லூரியில் கம்ப்யூட்டர் பயிற்சி முகாம்ராஜா தேசிங்கு கல்லூரியில் கம்ப்யூட்டர் பயிற்சி முகாம்
ராஜா தேசிங்கு கல்லூரியில் கம்ப்யூட்டர் பயிற்சி முகாம்
ராஜா தேசிங்கு கல்லூரியில் கம்ப்யூட்டர் பயிற்சி முகாம்
ராஜா தேசிங்கு கல்லூரியில் கம்ப்யூட்டர் பயிற்சி முகாம்
ADDED : செப் 06, 2011 10:32 PM
செஞ்சி : வல்லம் ஒன்றியத்தை சேர்ந்த ஊராட்சி உதவியாளர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி முகாம் நடந்தது.
பிற்படுத்தப்பட்ட மண்டலங்களுக்கான மானிய நிதி திட்டத்தின் கீழ் நாட்டார்மங்கலம் ராஜாதேசிங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் கம்யூட்டர் பயிற்சி முகாம் நடந்தது. முகாம் துவக்க விழாவிற்கு கல்லூரி முதல்வர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். பி.டி.ஓ., கலியமூர்த்தி முகாமை துவக்கி வைத்தார். கம்யூட்டர் துறைத்தலைவர் பேராசிரியர் முரளிதரன் தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் ஒன்றியத்தை சேர்ந்த 40 ஊராட்சி உதவியாளர்கள் பயிற்சி பெற்றனர். அலுவலக ஊழியர் முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


