Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/டீ கடை பெஞ்சு

டீ கடை பெஞ்சு

டீ கடை பெஞ்சு

டீ கடை பெஞ்சு

PUBLISHED ON : செப் 18, 2011 12:00 AM


Google News
Latest Tamil News

கூடங்குளத்தை பத்த வைக்கும் தி.மு.க., மாஜி...!''சட்டசபை அறிவிப்பை பார்த்து, மத்திய அரசு அதிகாரிகள், 'அப்-செட்'ல இருக்கா ஓய்...!'' என, அடுத்த விஷயத்துக்குள் நுழைந்தார் குப்பண்ணா.



''அப்படி என்ன அறிவிச்சுட்டாவ...'' என்றார் அண்ணாச்சி.



''கடல்ல செயற்கை மீன் உறைவிடங்களை அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு வெற்றிகரமா செயல்படுத்திருக்கு ஓய்...

இந்த திட்டத்தை விரிவுபடுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை... ஆனா, சட்டசபையில் மீன்வளத் துறை அறிவிப்புல, 'செயற்கை மீன் உறைவிடங்கள் கடல் பகுதியில் இழுவலைகளை பயன்படுத்த தடையாக அமைகிறது'ன்னு சொல்லிருக்கா...



''இதைப் பார்த்த மத்திய அரசு அதிகாரிகள், 'வெற்றிகரமான இந்த திட்டத்தை இப்படி விமர்சனம் பண்ணிருக்காளே... செயற்கை மீன் உறைவிடங்கள் கடல்ல தெரியற மாதிரி தான் இருக்கும்... கரையில இருந்து குறைவான தூரத்துல சில இடங்கள்ல தான் இருக்கும்... அது, வலைகளை பயன்படுத்த தடையா இருக்கறதில்லை... மீனவர்கள் யாரோ சொன்ன தப்பான தகவலை வச்சு, சட்டசபையில இப்படி பதிவு பண்ணிட்டாளே'ன்னு வருத்தத்துல இருக்கா...'' என்றார் குப்பண்ணா.



''மண்டலங்கள்ல மாற்றம் செய்யப் போறாங்க வே...'' என அடுத்த மேட்டரை துவக்கினார் பெரியசாமி அண்ணாச்சி.



''எந்த துறையிலங்க...'' என்றார் அந்தோணிசாமி.



''போலீஸ்ல வே... தமிழகத்துல சட்டம் - ஒழுங்கை பராமரிக்க, நாலு போலீஸ் மண்டலங்கள் இருக்கு வே... 'தெற்கு, வடக்கு, மேற்கு, மத்திய'ன்னு நாலு மண்டலங்கள் இருக்கு... இதை, ஐ.ஜி.,க்கள் நிர்வகிக்கறாவ... இதெல்லாத்துக்கும் சேர்த்து, ஒரு ஏ.டி.ஜி.பி., இருக்கார்... இதை, மாத்தப் போறாவ...



''மேற்கு, வடக்கு இரண்டையும் ஒரு ஏ.டி.ஜி.பி., தலைமையிலும், தெற்கு, மத்திய இரண்டையும் இன்னொரு ஏ.டி.ஜி.பி., தலைமையிலும் கொடுக்கப் போறாவ... அதனால, ஒரு ஏ.டி.ஜி.பி., கூடுதலா வர்றாரு... பரமக்குடி கலவரத்தின் எதிரொலியா இந்த மாற்றம் வரப் போவுது வே...



''இப்படி கூடுதலா ஒரு அதிகாரிய நியமிக்கறதால, தெற்கு, மத்திய மண்டலங்கள்ல ஏதாச்சும் சம்பவம் நடந்தா உடனே, அந்த அந்த அதிகாரி அங்க போய் நிலைமையை சமாளிக்க வசதியாக இருக்கும்ன்னு நினைக்காங்க...'' என்றார் அண்ணாச்சி.



''கூடங்குளம் பிரச்னையின் பின்னணியில, தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ., இருக்காராம் பா...'' என, கடைசி விஷயத்துக்கு தாவினார் அன்வர்பாய்.



''இதிலும் அரசியலா ஓய்...?'' என்றார் குப்பண்ணா.



''கூடங்குளம் அணு மின்நிலைய கட்டுமானப் பணிகள், பத்து வருஷமா நடந்துட்டு இருக்கு... காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு இதில் முழு மூச்சா ஈடுபட்டது... கூட்டணி கட்சியா இருந்த தி.மு.க.,வும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தது...



''இப்ப, ஆட்சி மாறியதும், போராட்டத்தை பத்த வச்சிருக்காங்க... கூடங்குளம் இருக்கற தொகுதியைச் சேர்ந்த, தி.மு.க., மாஜி எம்.எல்.ஏ., தான் பின்னணியில் இருக்காராம்... கடந்த சட்டசபை தேர்தலில், தோற்றுப் போனதால, ஓய்வு நேரத்துல இப்படி அரசியல் பண்றதா சொல்றாங்க பா...'' எனக் கூறிவிட்டு, 'அப்பாவியாக' எழுந்தார் அன்வர்பாய்; பெஞ்சில் அமைதி திரும்பியது.



பரமக்குடி கலவரத்துக்கு எஸ்.பி., காரணமா?



''கட்சிக்காரங்கன்னா முதல் மரியாதையாம்... ஆசிரியர்கள்னா நீண்ட நேரம் காக்க வைச்சிடறாராம்ங்க...!'' என விவாதத்தை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.



''ஆளுங்கட்சியை அனுசரிச்சுப் போகலைன்னா, நிலையா எந்த இடத்திலும் இருக்க முடியாதே பா...'' என்றார் அன்வர்பாய்.



''பள்ளிக் கல்வித் துறையில இருக்கற, 'சாமி'யான அதிகாரிதான் இப்படி செயல்படறாருங்க... ஆளுங்கட்சி, எதிர்க்கட்சின்னு எந்தக் கட்சிக்காரங்க வந்தாலும், அவங்களை காக்க வைக்காம உடனே உள்ள அழைச்சு, அவங்க கோரிக்கைகளை பவ்யமா கேட்டு, முடிஞ்ச வரை தீர்த்து வைக்கறாராம்...



''அதே நேரத்துல, துறை ரீதியிலான பிரச்னைகளுக்காக ஆசிரியர்கள் சந்திக்க வந்தா, அவங்களை நீண்ட நேரம் காக்க வைச்சு நோகடிக்கறார்... ஆசிரியர்கள் எல்லாம் புலம்பறாங்க...'' என்றார் அந்தோணிசாமி.



''பெண் போலீசார் பிரச்னையை கண்டுக்காத அதிகாரிக்கு ஏகப்பட்ட, 'டோஸ்' கிடைச்சிருக்கு பா...'' என அடுத்த தகவலுக்கு மாறினார் அன்வர்பாய்.



''விளக்கமா சொல்லும் ஓய்...'' என்றார் குப்பண்ணா.



''சென்னை, அண்ணா சதுக்கம் போலீஸ் ஸ்டேஷனுக்கு பக்கத்துல இருக்கற கடற்கரை சாலை வழியாகத் தான் தினமும் முதல்வர், கோட்டைக்கு போயிட்டு வர்றாங்க... அதனால, இந்த ஸ்டேஷனைச் சேர்ந்த போலீசார் ஓய்வில்லாம வேலை பார்த்துட்டு இருக்காங்க பா... இந்நிலையில, பத்து நாளா ஸ்டேஷன்ல தண்ணீர் வரலை... பெண் போலீசார் பாத்ரூம் கூட போக முடியாம அவதிப்பட்டுருக்காங்க...



''இந்த விஷயத்தை, இன்ஸ்பெக்டர் கண்டுக்காம இருந்திருக்காரு பா... ஒரு பெண் அதிகாரிக்கு விஷயம் தெரிஞ்சதும், 'ஏன்யா... உனக்கு அவசரமுன்னா பீச் மணல் பக்கம் ஒதுங்கிடுவ... பொம்பள புள்ளைங்க எங்கய்யா போவாங்க?'ன்னு, பிடிச்சு எகிறிட்டாங்க... அதுக்கப்பறம், பொதுப்பணித்துறை அதிகாரிகளைப் புடிச்சு, பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைச்சாரு பா...'' என விளக்கினார் அன்வர்பாய்.



''போலீஸ் அதிகாரி ஒருத்தர், பரமக்குடிக்கு போன விஷயம் பிரச்னையாயிருக்கு வே...'' என, கடைசி மேட்டருக்குள் நுழைந்தார் பெரியசாமி அண்ணாச்சி.



''அவரால ஏதாச்சும் பிரச்னையாயிடுத்தா ஓய்...'' என விசாரித்தார் குப்பண்ணா.



''சென்னையில இருந்து, ஒரு எஸ்.பி.,யை பரமக்குடிக்கு அனுப்பி வைச்சாங்க வே... இவர், ஏற்கனவே அங்க எஸ்.பி.,யா இருந்தப்ப, இவர் மேல ஒரு சில பகுதியைச் சேர்ந்தவங்க கோபத்துல இருந்திருக்காவ... இந்நிலையில, அதிகாரி அங்க போன சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அவரை ஒரு குரூப் தாக்க முயற்சி பண்ணிருக்காவ... இது தான் பிரச்னைக்கு காரணமுன்னும் ஒரு தரப்புல பேச்சு கிளம்பிருக்கு...



''இந்த விஷயம் மேலிடத்துக்கு தெரிஞ்சதும், 'இவரை ஏன் அங்க அனுப்புனீங்க?'ன்னு, கோபமா கேள்வி கேட்டுருக்காங்க வே...'' என்றார் அண்ணாச்சி.



''அதிகாரி யாருன்னு சொல்லலையே ஓய்...'' என்றார் குப்பண்ணா.



''நண்பர், 'செந்தில்வேலனை' பார்த்துட்டு வந்துடறேன் வே...'' எனக் கூறிவிட்டு, அண்ணாச்சி புறப்பட, மற்றவர்களும் கிளம்பினர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us