ADDED : அக் 07, 2011 12:01 AM
திண்டுக்கல் : ''மக்கள் நலமுடன் வாழ பல நல்ல திட்டங்களை செய்வேன்,'' என,
திண்டுக்கல் நகராட்சி 1 வது வார்டு அ.தி.மு.க., வேட்பாளர் ஜெ.முத்துலட்சுமி
கூறினார்.
திண்டுக்கல் பாலதிருப்பதி, நாராயணபிள்ளை தோட்டம், பழநிரோட்டில்
அவர் பேசியது: தமிழகத்தை முதல் மாநிலமாக்க பாடுபடும் முதல்வருக்கும்,
அமைச்சர் விஸ்வநாதனுக்கும் நன்றி. மக்கள் நலமுடன் வாழ, பல நல்ல திட்டங்களை
செய்வேன். பாலதிருப்பதியில் குடிநீர் குழாய் சீரமைக்கப்பட்டு, சீரான
வினியோகம் செய்யப்படும். மகளிர் கழிப்பறை, ஓடைகள் பராமரிக்கப்படும். தாஸ்
காலனி, மீனாட்சிநாயக்கன்பட்டி ரோடுகள், ஓடை சீரமைக்கப்பட்டு தடுப்பு
சுவர்கள் அமைக்கப்படும். நாராயணபிள்ளை தோட்டத்தில் ஆழ்குழாய் அமைத்து,
குடிநீர், கழிப்பறை வசதி செய்துதரப்படும். அய்யன்குளத்தில் ஆகாய தாமரைகள்
அகற்றப்பட்டு, தடுப்பு வேலிகள் அமைக்கப்படும். தெருக்கள்தோறும் குப்பை
தொட்டிகள் அமைக்கப்பட்டு, குப்பை வண்டிகளும் வருவதற்கும் ஏற்பாடு
செய்யப்படும். கே.கே.நகரில் குடிநீர் குழாய் அமைத்து, ஓடைகள், பாலங்கள்
சீரமைக்கப்படும். பழநிரோட்டில் உள்ள டிரான்ஸ்பார்மர் அமைச்சர் முயற்சியால்
மாற்றி அமைக்கப்படும். பால்ச்சாமி சத்திரம் தெருவில் மின்விளக்குகள்
அமைக்கப்படும். வீட்டிற்கு ஒரு மரக்கன்று, குழந்தைகள் பெயரில்
வைக்கப்படும். இலவச டைப் ரைட்டிங், கம்ப்யூட்டர் பயிற்சி மையம்
திறக்கப்படும். ஏழைக் குழந்தைகளுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
மக்கள் குறைகள் கேட்க அலுவலகம், புகார் பெட்டி வைக்கப்படும். முதியோர்
பென்ஷன், ஜாதி, இருப்பிட, வருமான சான்று, ரேஷன்கார்டு, வாக்காளர் அட் டை,
ஊனமுற்றோருக்கு சான்றிதழ் வாங்கி, அரசின் உதவிகள் கிடைக்க ஏற்பாடு
செய்யப்படும், என்றார்.


