/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/சிறுவலூரில் தொழில் வேலைவாய்ப்பு: சத்தியபாமா வாசுசிறுவலூரில் தொழில் வேலைவாய்ப்பு: சத்தியபாமா வாசு
சிறுவலூரில் தொழில் வேலைவாய்ப்பு: சத்தியபாமா வாசு
சிறுவலூரில் தொழில் வேலைவாய்ப்பு: சத்தியபாமா வாசு
சிறுவலூரில் தொழில் வேலைவாய்ப்பு: சத்தியபாமா வாசு
ADDED : அக் 12, 2011 01:37 AM
கோபிசெட்டிபாளையம்: ''சிறுவலூரில் தொழில் வேலைவாய்ப்பு, குடிநீர், சாலை
வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற பாடுபடுவேன்,'' என, கோபி
யூனியன் கவுன்சிலர் பதவிக்கான அ.தி.மு.க., வேட்பாளர் சத்தியபாமா வாசு,
பஞ்சாயத்து தலைவர் வேட்பாளர் அண்ணாதுரை ஆகியோர் தெரிவித்தனர்.
சிறுவலூர் பஞ்சாயத்தை உள்ளடக்கிய யூனியன் கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க.,
வேட்பாளராக போட்டியிடுபவர் சத்தியபாமாவாசு. எம்.ஏ., பயின்றவர். நகராட்சி
துணைத்தலைவர் பதவி வகித்தவர். அ.தி.மு.க., மாவட்ட மகளிரணி செயலாளராக
உள்ளார். இவரது கணவர் வாசு, தீவிர கட்சி பணியாற்றி வருகிறார்.
யூனியன் கவுன்சிலர் அ.தி.மு.க., வேட்பாளர் சத்தியபாமா வாசு, சிறுவலூர்
பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான வேட்பாளர் அண்ணாதுரை ஆகியோர் கூறியதாவது:
வறட்சி பகுதியான சிறுவலூரில், தமிழக முதல்வர் நல்லாசியுடன், வேளாண்
அமைச்சர் செங்கோட்டையன் ஆதரவுடன் தொழிற்பேட்டை ஏற்படுத்தி, இப்பகுதி
மக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர பாடுபடுவோம். இங்குள்ள
நடுநிலைப்பள்ளி; மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படும்.
சிறுவலூர்
குடிநீர் பிரச்னைக்கு முழுமையான தீர்வு காணப்படும்.சிறுவலூரில் இருந்து
நீலாம்பாளையம், எம்.ஜி.ஆர்., நகர் வழியாக கொளப்பலூருக்கு பஸ் வசதி
செய்யப்படும். ஊஞ்சப்பாளையம், சேவுகம்பாளையம், ஆயிபாளையம் பகுதிக்கு
கூடுதலாக பஸ் வசதி செய்யப்படும். சிறுவலூர் வாரச் சந்தையில் வணிகவளாகம்
அமைக்கப்படும். சிறுவலூரில் பஸ் ஸ்டாண்டு அமைக்கப்படும்.குடிநீர், சாலை
அபிவிருத்தி, சாக்கடை வசதி, தெருவிளக்கு குடியிருப்பு போன்ற அடிப்படை
திட்டங்கள் நிறைவேற்ற பாடுபடுவோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர் சிறுவலூர்
மனோகரன், சிறுவலூர் யூனியன் கவுன்சிலர் வேட்பாளர் சத்தியபாமா வாசு ஆகியோர்
'இரட்டை இலை' சின்னத்திலும், பஞ்சாயத்து தலைவர் அ.தி.மு.க., வேட்பாளர்
அண்ணாதுரை 'பூட்டுசாவி' சின்னத்திலும் ஓட்டு சேகரித்தனர்.
வேட்பாளர்களுக்கு, கட்சியினரும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


