/உள்ளூர் செய்திகள்/கரூர்/சேரன் மேல்நிலைப்பள்ளியில்இலக்கிய மன்ற துவக்க விழாசேரன் மேல்நிலைப்பள்ளியில்இலக்கிய மன்ற துவக்க விழா
சேரன் மேல்நிலைப்பள்ளியில்இலக்கிய மன்ற துவக்க விழா
சேரன் மேல்நிலைப்பள்ளியில்இலக்கிய மன்ற துவக்க விழா
சேரன் மேல்நிலைப்பள்ளியில்இலக்கிய மன்ற துவக்க விழா
ADDED : ஆக 12, 2011 11:09 PM
வேலாயுதம்பாளையம்: புன்னம் சத்திரம் சேரன் மேல்நிலைப்பள்ளி மற்றும்
மெட்ரிக்குலேசன் பள்ளி சார்பில் பள்ளி வளாகத்தில் இலக்கிய மன்ற துவக்க விழா
நடந்தது.
விழாவில் சென்னையை சேர்ந்த தமிழ் பேராசிரியரும், தொலைக்காட்சி
பேச்சாளருமான, சபரிமாலா 'கனவு மெய்பட வேண்டும்' என்ற தலைப்பில் பேசியதாவது:
மாணவர்கள் வாழ்க்கையில் நல்ல ஒழுக்கத்தை பள்ளி பருவத்தில் கற்றுக்கொள்ள
வேண்டும். அந்த நல்ல ஒழுக்கமே எதிர்காலத்தில் உங்கள் வளர்ச்சிக்கு ஊன்று
கோலாக அமையும். ஆனால், தற்போது படித்தவர்கள் தான் அதிகளவில் சமூக விரோத
செயல்களில் ஈடுபடுகின்றனர்.இதற்கு காரணம் நல்லொழுக்கம் இல்லாததுதான். மாநில
அளவில் முதல் மதிப்பெண் பெற்றால் கூட வாழ்வியல் உலக நெறி தெரியவில்லை
என்றால், அந்த மாணவர்களின் படிப்பு பூஜ்யம்தான்.
எனவே, நல்ல ஒழுக்கம், வாழ்வியல் உலக நெறிகளை உணர்ந்து நற்பண்புடன் படித்த ஒரு சாதனையாளர்களாக ஒவ்வொரு மாணவர்களும் திகழ வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.பள்ளி செயலாளர் பாண்டியன், சட்ட ஆலோசகர் செல்வதுரை,
பி.டி.ஏ., பொறுப்பாளர் சித்திர பாண்டியன், தலைவர் சுப்பிரமணி, பள்ளி
தலைமையாசிரியர் உமா ராமச்சந்திரன், ஆசிரியர் அம்பிகா உள்பட பலர்
பங்கேற்றனர்.


