/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/சிறந்த நகரமாக உடுமலை மாற்றப்படும்: தே.மு.தி.க., வேட்பாளர் உறுதிசிறந்த நகரமாக உடுமலை மாற்றப்படும்: தே.மு.தி.க., வேட்பாளர் உறுதி
சிறந்த நகரமாக உடுமலை மாற்றப்படும்: தே.மு.தி.க., வேட்பாளர் உறுதி
சிறந்த நகரமாக உடுமலை மாற்றப்படும்: தே.மு.தி.க., வேட்பாளர் உறுதி
சிறந்த நகரமாக உடுமலை மாற்றப்படும்: தே.மு.தி.க., வேட்பாளர் உறுதி
ADDED : அக் 08, 2011 12:28 AM
உடுமலை : ''பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, உடுமலை நகராட்சியை தமிழகத்திலேயே சிறந்த நகரமாக மாற்றப்படும்,'' என தே.மு.தி.க., வேட்பாளர் ராதா தெரிவித்தார்.உடுமலை நகராட்சி தலைவர்பதவிக்கு தே.மு.தி.க., சார்பில் ராதா போட்டியிடுகிறார்.
இவர் நமது நிருபரிடம் அளித்த பேட்டி:உடுமலை நகராட்சிக்குட்பட்ட33 வார்டுகளில் கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினருடன் தீவிர ஓட்டு சேகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளோம். வீடு வீடாக சென்று ஓட்டு சேகரிக்கும் போது மக்கள் வரவேற்பு அளிக்கின்றனர்.உடுமலை நகராட்சியின் வளர்ச்சிக்கு பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டியதுள்ளது. தேர்தலில், வெற்றி பெற்றால், மக்களின் அடிப்படைத்தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். பாதாள சாக்கடைதிட்டம் நிறைவேற்றப்பட்டு, நகரின் சுகாதாரம் பாதுகாக்கப்படும். தளி ரோடு ரயில்வே மேம்பாலம் பணி விரைவாக முடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.உடுமலை பஸ்ஸ்டாண்டில், போதுமான இருக்கைகள், கழிப்பிடம், நிழற்குடை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும். நகரப்பகுதியின் மக்களின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், இரண்டாவது குடிநீர் திட்ட குழாய்களை சீரமைக்கவும், மூன்றாவது குடிநீர் திட்டம் செயல்படுத்தவும் உரிய முயற்சிகள் எடுக்கப்படும். புதிய மனைப்பிரிவுகளுக்கும் குடிநீர் வசதி ஏற்படுத்தப்படும்.காலரா, மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க நகராட்சி சுகாதார திட்டங்கள் மூலம் மாதம் ஒரு முறை இலவச மருத்துவ முகாம் நடத்தப்படும். சாலை வசதி, மின்விளக்கு வசதி, சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட்டு, தூய்மையான நகரமாக மாற்றப்படும்.சத்துணவு கூடங்கள், ஊட்டச்சத்து மையங்கள், நகராட்சி பள்ளிகள் புதுப்பிக்கப்படும். கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்த ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையம் நகரப்பகுதியில் அமைக்கப்படும். நகராட்சி தலைவரே வார்டு வாரியாக சென்று மக்கள் குறை கேட்டும் முகாம்களை நடத்தி மக்கள் குறைகள் உடனடியாக தீர்க்கப்படும். வீட்டு, தொழில் வரி ஆய்வு செய்து சீரமைக்கப்படும். நகராட்சி மூலமாக மக்கள் பெறக்கூடிய சான்றிதழ்கள்,காலதாமதம் ஏதுமின்றி உடனடியாக வழங்கப்படும். உடுமலை புறவழிச்சாலை விரைவில் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.இதுபோன்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, உடுமலை நகராட்சியை தமிழகத்திலேயே சிறந்த நகரமாக மாற்றப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


