அன்னா குழுவுக்கு சட்டகல்லூரி மாணவர் நோட்டீஸ்
அன்னா குழுவுக்கு சட்டகல்லூரி மாணவர் நோட்டீஸ்
அன்னா குழுவுக்கு சட்டகல்லூரி மாணவர் நோட்டீஸ்
ADDED : அக் 12, 2011 03:48 PM
புதுடில்லி: வலுவான லோக்பால் மசோதா நிறைவேற்றாத காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டுப்போட வேண்டாம் என அரியானா மாநிலம் ஹிசார் தொகுதியில் அன்னா குழுவினர் பிரசாரம் மேற்கொண்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்ட கல்லூரி மாணவன் ஒருவன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அவர் தனது நோட்டீசில், ஊழலுக்கு எதிராக போராடாமல் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு எதிராக மட்டும் பிரசாரம் செய்வதன் மூலம் இந்தியர்களின் மனதை புண்படுத்த விட்டதாக கூறியுள்ளார். மேலும் அவர், இதன் மூலம் நாட்டு மக்களை தவறாக வழிநடத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார். குறிப்பிட்ட எந்த கட்சிக்கு எதிராக இல்லாமலும், அரசியல் கலக்காமலும் போராட்டம் நடத்தி லட்சகணக்கான மக்களை அன்னா போராட்டம் மக்களை கவர்ந்தது. ஆனால் பின்னர் குழு தனது நிலையை மாற்றிக்கொண்டு காங்கிரஸ் கட்சிக்கு எதிராக திரும்பியுள்ளது. குளிர்கால பார்லிமென்ட் தொடர் வரை காத்திராமல், லோக்சபா இடைத்தேர்தலில் அக்கட்சிக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டனர். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 5 மாநில சட்டசபை தேர்தலிலும் பிரசாரம் மேற்கொள்ளப்போவதாக குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த நோட்டீஸ் அன்னா குழுவில் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. குழுவினர் அனைவரும் நாட்டு மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவும் நோட்டீசில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பிரசாரம் செய்த குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய உள்துறை அமைச்சகம், டில்லி போலீஸ் கமிஷனர், அரியானா டி.ஜி.பி., ஆகியோரிடமும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.


