ADDED : அக் 08, 2011 11:51 PM
திருத்துறைப்பூண்டி: பஞ்சாயத்து வார்டு தேர்தலில் தந்தை காங்கிரஸ் சார்பிலும், மகள் தி.மு.க., சார்பிலும் போட்டியிடுவதால் பரபரப்பு.திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை யூனியன் ஓவரூர் கிராம பஞ்சாயத்து ஆறாவது வார்டில் தந்தை முத்துகிருஷ்ணன் காங்கிரஸ் சார்பிலும், மகள் பஞ்சவர்ணம் தி.மு.க., சார்பிலும் போட்டியிடுகின்றனர்.
இருவரும் தங்கள் கட்சியை கூறி வாக்கு சேகரித்து வருவதால் மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


