/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/மண்ணெண்ணெய் தேவை குறைகிறது : கார்டு ஆய்வில் வெட்ட வெளிச்சம்மண்ணெண்ணெய் தேவை குறைகிறது : கார்டு ஆய்வில் வெட்ட வெளிச்சம்
மண்ணெண்ணெய் தேவை குறைகிறது : கார்டு ஆய்வில் வெட்ட வெளிச்சம்
மண்ணெண்ணெய் தேவை குறைகிறது : கார்டு ஆய்வில் வெட்ட வெளிச்சம்
மண்ணெண்ணெய் தேவை குறைகிறது : கார்டு ஆய்வில் வெட்ட வெளிச்சம்
ADDED : ஆக 11, 2011 10:37 PM
திண்டுக்கல் : தமிழகத்திற்கான மண்ணெண்ணெய் அளவை குறைக்க, எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
இதன்படி நடந்த ஆய்வில், தகுதியற்ற பலர் மண்ணெண்ணெய் பெற்றது, வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தமிழகத்திற்கான மண்ணெண்ணெய் தேவையில், 70 சதவீதம் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால், ரேஷன் கடைகளில் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில், மேலும் அளவை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. 'போதிய காஸ் சிலிண்டர் வழங்கப்பட்ட போதும், மண்ணெண்ணெய் வினியோகம் ஏன் குறையவில்லை?' என, எண்ணெய் நிறுவனங்கள், மாநில அரசுகளை கேள்வி எழுப்பியுள்ளன.
இதனால், தகுதியானவர்களுக்கு மட்டும் மண்ணெண்ணெய் கிடைக்கிறதா? என்பதை கண்டறிய, ரேஷன் கார்டுகளை ஆய்வு செய்யும் பணி, ஜூனில் துவங்கியது. இப்பணி ஆக., 16 வரை நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கார்டுகளை ஆய்வு செய்ததால், மண்ணெண்ணெய் வினியோக முறைகேடு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சிலிண்டர் பெற, ரேஷன் கார்டை ஆவணமாக காட்டாமல், வேறு வழிகளில் பெற்றவர்கள், தொடர்ந்து மண்ணெண்ணெய் வாங்குவது தெரியவந்துள்ளது. தற்போது இந்த கார்டுகளில், 'மண்ணெண்ணெய் பெற தகுதியில்லை,' என, முத்திரை வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில், மாதத்திற்கு 32,053 லிட்டர், தேவை குறைந்துள்ளது. ரேஷன் கார்டுகளை, காஸ் ஏஜன்சிகள் மூலம் வருவாய் துறையினர் ஆய்வு செய்ததால், மண்ணெண்ணெய் வினியோக குளறுபடி தடுக்கப்பட்டுள்ளது. கார்டுகள் ஆய்வு பணியை மேலும் நீடிக்க, அரசு முடிவு செய்துள்ளது. அனைத்து கார்டுகளையும் முறையாக பதிவு செய்யும் வரை, இது தொடரும்.


