ADDED : ஆக 03, 2011 12:10 AM
பேய்க்குளம் : பேய்க்குளம் அருகே புதிய ஆலய அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
பேய்க்குளம் அருகே சி.சவேரியார்புரம் தூய சவேரியார் புதிய ஆலய அடிக்கல் நாட்டுவிழா நடந்தது. விழாவிற்கு தூத்துக்குடி மறைமாவட்ட பொருளாளர் தந்தை அருட்பணி ஜெபநாதன் தலைமை வகித்தார். சாத்தான்குளம் மறைமாவட்ட முதன்மை குரு பேரருட் திரு எட்வர்ட் முன்னிலை வகித்தார். அடிக்கல் நாட்டுவிழா காலையில் திருப்பலியுடன் ஆரம்பமானது. விழாவில் நொச்சிகுளம் பங்குதந்தை மைக்கிள் ஜெகதீஸ், சோமநாதபேரி பங்குதந்தை இருதயசாமி, சிந்தாமணி பங்குதந்தை சலேத் ஜெரால்டு உட்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை சி.சவேரியார்புரம் பங்குதந்தை சகாய ஜஸ்டின், அருட்சகோதரிகள் ஆலய கட்டுமான பணிக் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்தனர்.