/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/திருக்குறள் பேரவையின் விருது வழங்கும் விழாதிருக்குறள் பேரவையின் விருது வழங்கும் விழா
திருக்குறள் பேரவையின் விருது வழங்கும் விழா
திருக்குறள் பேரவையின் விருது வழங்கும் விழா
திருக்குறள் பேரவையின் விருது வழங்கும் விழா
ADDED : ஆக 11, 2011 11:07 PM
திருப்பூர் : உலக திருக்குறள் பேரவை சார்பில் பாராட்டு மற்றும் விருது வழங்கும் விழா, திருப்பூரில் நடந்தது.
தலைவர் நாகேஸ்வரன் தலைமை வகித்தார். செயலாளர் நாகராஜன், துணை தலைவர் ராமசாமி முன்னிலை வகித்தனர். திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில், 1,330 குறள் ஒப்புவித்த கரூர் வள்ளுவர் அறிவியல் மேலாண்மை கல்லூரி நிறுவனர் கருப்பையாவுக்கு, 'திருக்குறள் செம்மல்' விருது வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்ட அளவில் பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற, நல்லிமடம், சின்னக்காம்பட்டி, கருக்கன் காட்டுபுதூர், தோட்டம்பாளையம், புதுப்பை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பாராட்டப்பட்டனர். தொடர்ந்து, தாய்த்தமிழ் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. குன்றக்குடி பொன்னம்பல அடிகள் சிறப்புரை ஆற்றினார். உலக திருக்குறள் பேரவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜ் நன்றி கூறினார்.


