Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/டிரான்ஸ்ஃபார்மரில்பிடித்த தீயால் பரபரப்பு

டிரான்ஸ்ஃபார்மரில்பிடித்த தீயால் பரபரப்பு

டிரான்ஸ்ஃபார்மரில்பிடித்த தீயால் பரபரப்பு

டிரான்ஸ்ஃபார்மரில்பிடித்த தீயால் பரபரப்பு

ADDED : செப் 30, 2011 01:56 AM


Google News
ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகம் எதிரில், ஆயில் கசிவால் டிரான்ஸ்ஃபார்மரில் பிடித்த தீயை, தீயணைப்பு படையினர் அணைத்தனர்.ஈரோடு கலெக்டர் அலுவலகம் எதிரில் 200 கிலோவாட்ஸ் திறன் கொண்ட டிரான்ஸ்ஃபார்மர் உள்ளது. அதில் உள்ள ஃபர்னஸ் ஆயில் கசிவு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலையில் பெய்த மழையின் காரணமாக, டிரான்ஸ்ஃபார்மர் கம்பத்தின் கீழே கசிந்துள்ளது. நேற்று இரவு 7.45 மணியளவில் மின் கம்பத்திலிருந்து நெருப்பு பொறி பறந்ததில் தீப்பிடித்தது.

போலீஸார் அவ்வழியே வாகனங்கள் செல்ல முடியாதபடி தடுத்து, சம்பத் நகர் வழியே வாகனங்களை திருப்பிவிட்டனர். தீயணைப்புத்துறையினர், மின் கம்பியின் மீது படாத அளவில் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். மின்வாரிய உதவி இன்ஜினியர் சீனிவாசன் மற்றும் மின் ஊழியர்கள் விரைந்து வந்து மற்ற மின் இணைப்புகளிலிருந்து டிரான்ஸ்ஃபார்மரை துண்டித்தனர். நாளை காலையில் பழுது பார்க்கும் பணி நடக்க உள்ளது.தீயை அணைத்த சிறிது நேரத்தில், சிறிது தொலைவில் இரு சக்கர வாகன பழுது பட்டறையில் வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் கேன் திடீரென தீப்பிடித்தது. அந்த கேனை நடுரோட்டில் தள்ளி விட்டனர். பிளாஸ்டிக் கேன் என்பதால், தீயை அணைக்க முடியவில்லை. அதை அணைக்க முயன்ற ஒருவரது காலில் தீப்பிடிக்கவே, பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்புதுறையினர் அந்த தீயையும் அணைத்தனர்.

இரு சம்பவங்களும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us