இந்து முன்னணி ராஜகோபாலன் கொலை வழக்கு: 6 பேருக்கு ஆயுள்
இந்து முன்னணி ராஜகோபாலன் கொலை வழக்கு: 6 பேருக்கு ஆயுள்
இந்து முன்னணி ராஜகோபாலன் கொலை வழக்கு: 6 பேருக்கு ஆயுள்
ADDED : செப் 08, 2011 07:19 PM
திருநெல்வேலி: இந்து முன்னணி தலைவர் ராஜகோபாலன் கொலை வழக்கில் 6 குற்றவாளிகளுக்கும் ஆயுள்தண்டனை விதித்து நெல்லை கோர்ட் தீர்ப்பளித்தது.
இந்துமுன்னணி அமைப்பின் மாநில தலைவராக இருந்தவர் ராஜகோபாலன். இவர் கடந்த 1994ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி, மதுரையில் கும்பல் ஒன்றால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் மதுரை நாகூர்தோப்பு சீனிநயினாமுகம்மது(47) முதன்முதலில் கைது செய்யப்பட்டார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் கோவை, உக்கடத்தை சேர்ந்த சாகுல்அமீது(28), மதுரை தைக்கா முதல் தெருவை சேர்ந்த ராஜாஉசேன்(41), கோவை தபால்தந்திநகர் முகம்மது சுபேர்(36), கோவை மணியன்தோட்டம் முதல் தெரு ஜாகிர்உசேன்(32), மதுரை தாசில்தார்நகர் அப்துல்அஜீஸ்(38), ஆகிய 5பேர் வெவ்வேறு ஆண்டுகளில் கைது செய்யப்பட்டனர். தங்களது மதத்திற்கு எதிராக ராஜகோபாலன் பிரச்சாரம் மேற்கொண்டதால் கொலை செய்ததாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்தனர். இந்த வழக்கினை நெல்லையில் உள்ள செஷன்ஸ் கோர்ட் விசாரித்தது. 94ல் நடந்த கொலை வழக்கின் தீர்ப்பு 17 ஆண்டுகளை நெருங்கிய நிலையில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. கைதானவர்களில் சீனிநயினா முகம்மது மட்டும் ஜாமீனில் வெளியே இருந்ததால் கோர்ட்டில் அவர் தனியாக ஆஜராகினர். மற்ற 5 பேர் மீதும் வெவ்வேறு வழக்குகளில் தண்டனை பெற்றிருப்பதாலும் வழக்குகள் நிலுவையில் இருந்ததால் அவர்கள் தாங்கள் அடைக்கப்பட்டிருந்த சிறைகளில் இருந்து போலீஸ் வாகனங்களில் அழைத்துவரப்பட்டனர். இந்நிலையில், நீதிபதி விஜயராகவன் தமது தீர்ப்பில் 6 பேருக்கும் ஆயுள்தண்டனையும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


