Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ப.வேலூரில் மாயமான சிறுவன் மீட்பு :பதட்டம் தணிந்ததால் அமைதி

ப.வேலூரில் மாயமான சிறுவன் மீட்பு :பதட்டம் தணிந்ததால் அமைதி

ப.வேலூரில் மாயமான சிறுவன் மீட்பு :பதட்டம் தணிந்ததால் அமைதி

ப.வேலூரில் மாயமான சிறுவன் மீட்பு :பதட்டம் தணிந்ததால் அமைதி

ADDED : ஆக 19, 2011 02:25 AM


Google News
ப.வேலூர்: ப.வேலூர் அருகே விவசாய தோட்டம் ஒன்றில், பழங்கால தங்க நாணயம் கிடைத்தது.

அந்த தங்க நாணயம், எத்தனை ஆண்டு காலம் பழமை வாய்ந்தது என்பது குறித்து, தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். ப.வேலூர் அருகே ஜேடர்பாளையம், கல்லுக்கடை மேட்டை சேர்ந்தவர் விவசாயி மணி. அவரது தோட்டத்தில், நேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த கண்ணம்மாள் (45), சம்பூர்ணம் (50), இளையம்மாள் (52) ஆகிய மூன்று கூலித் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது, கண்ணம்மாள் என்பவரது காலில், நிலத்தினுள் இருந்த சிறு மண்பாண்டம் ஒன்று தட்டுப்பட்டுள்ளது. அதைக் கண்ட கண்ணம்மாள் மற்ற இருவரையும் அழைத்து அதைக் காண்பித்துள்ளார். அதையடுத்து, மூவரும் அந்த மண்பாண்டத்தை மெதுவாக வெளியே எடுத்துள்ளனர். அப்போது, அந்த மண்பாண்டம் உடைந்து, அதில் இருந்து பழங்கால தங்கக்காசுகள் சிதறி விழுந்துள்ளது.அப்போது அங்கு வந்த விவசாயி மணி, அந்தத் தங்கக் காசுகளை பார்த்துள்ளார். பின், விவசாயி மணி உள்ளிட்ட நால்வரும், அந்த தங்கக்காசுகளை பிரித்து எடுத்துக் கொண்டுள்ளனர். அதுகுறித்து தகவலறிந்த கல்லுக்கடை மேடு வி.ஏ.ஓ., குணசீலன், விவசாயி மணி உள்ளிட்ட நால்வரிடமும் இருந்த தங்கக் காசுகளை தரும்படி தெரிவித்துள்ளார். அதன்பேரில், 9 தங்கக் காசுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த காசுகள் மட்டுமே அந்த மண்பாண்டத்தில் இருந்ததாக கூறியுள்ளனர். அந்தக் காசுகளை, பரமத்தி தாசில்தார் மல்லிகாவிடம், வி.ஏ.ஓ., குணசீலன் ஒப்படைத்தார். அந்த தங்கக் காசுகள், தொல்பொருள் ஆய்வுத்துறையினரிடம் ஒப்படைத்து, அவை எந்தக் காலத்து நாணயங்கள் என விசாரிக்கும்படி, தாசில்தார் உத்தரவிட்டுள்ளார். இதனிடைய, கல்லுக்கடை மேடு கிராமத்தில் உள்ள விவசாயத் தோட்டங்களில் தங்கப் புதையல் இருக்கலாம் என்ற புரளி கிளம்பியுள்ளது. தவிர, விவசாயி மணி தோட்டத்தில் தங்கத் தகடுகள் கிடைத்ததாகவும், அங்குள்ள கிராம மக்கள் மத்தியில் தகவல் பரவியுள்ளது.அதன்பேரில் விசாரணை நடத்தும்படி தாசில்தார் மல்லிகா, ஆர்.ஐ., வி.ஏ.ஓ., உள்ளிட்ட வருவாய்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். விவசாய தோட்டத்தில் தங்கப் புதையல் கிடைத்த சம்பவம், அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ப.வேலூர்: ப.வேலூர் அருகே மாயமான சிறுவனை, நாமக்கல் பஸ் ஸ்டாண்டில், மோகனூர் போலீஸார் மீட்டனர். அதனால், கடந்த இரு தினங்களாக நிலவி வந்த பதட்டம் தணிந்து, அமைதியான சூழல் ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், ப.வேலூர் அருகே கீழ்பாலப்பட்டி, குமாரபாளையத்தை சேர்ந்த நிஷான்(13), பூவரசன் (11), நிதிஷ் (9), சந்துரு (9) ஆகிய நான்கு சிறுவர்களும், கடந்த, 15ம் தேதி மாலை காவரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் தகாத வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் திட்டியபடி குளித்துள்ளனர்.அதை, அங்கு குளித்துக் கொண்டிருந்த ஜெயந்தி என்ற பெண் கண்டித்துள்ளார். அதை சிறுவர்கள் கண்டு கொள்ளாமல், தொடர்ந்து தகாத வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் பேசியபடி குளித்துள்ளனர். அதுகுறித்து ஜெயந்தி, தனது கணவர் காமராஜரிடம் தெரிவித்துள்ளார். அதையடுத்து, காமராஜ் அனுப்பிய இரு வாலிபர்கள், ஆற்றுக்குச் சென்று அங்கு குளித்துக் கொண்டிருந்த சிறுவர்களை அடித்து உதைத்துள்ளனர். அடி தாங்காத சிறுவர்கள அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். அதில், நிஷான் என்ற சிறுவன் மட்டும் வீடு திரும்பவில்லை. அதில் அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர், உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தை சேர்ந்தோர், சம்மந்தப்பட்ட வாலிபர்கள், சிறுவன் நிஷானை கடத்திச் சென்றிருக்கலாம் எனக் குற்றச்சாட்டு எழுப்பினர். அவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், சிறுவனை மீட்டுத் தரக்கோரியும், அவரது பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்த முயற்சித்தனர். இப்பிரச்னை, அக்கிராமத்தை சேர்ந்த இரு சமுதாய மக்களிடையே மோதலை உருவாக்கும் சூழலை ஏற்படுத்தியது. பதட்டத்தை தணிக்க, நாமக்கல் டி.எஸ்.பி., சுப்ரமணி தலைமையில் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். மேலும், சம்பவம் தொடர்பாக மோகனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை, நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் சிறுவன் நிஷான் இருப்பதாக, மோகனூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், நாமக்கல் பஸ் ஸ்டாண்ட் வந்த போலீஸார், சிறுவன் நிஷானை மீட்டு, அவர் எப்படி இங்கு வந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, சிறுவன் கிடைத்ததால் கடந்த இரு தினங்களாக குமாரபாளையம் கிராமத்தில் நிலவி வந்த பதட்டம் தணிந்து, அமைதியான சூழல் நிலவி வருகிறது





      Our Apps Available On




      Dinamalar

      Follow us