ADDED : செப் 03, 2011 12:22 AM
சிவகாசி : சிவகாசி சிவில் சப்ளை பிரிவில், ஊழியர் பற்றாக் குறையால், பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.சிவகாசி தாலுகாவில் ஒரு லட்சத்து 14 ஆயிரம் ரேஷன்கார்டுகள், 162 ரேஷன் கடைகள் உள்ளன.
மாவட்டத்திலேயே இங்குதான் அதிக ரேஷன் கார்டு, அதிக கடை உள்ளது. தொழில் நகரம் என்பதால், அதிக தொழிலாளர் வருகை, இடமாறி செல்வோரும் அதிகம். இதனால் இங்கு அதிக மக்கள் கூடுவர்.
பெயர் மாற்றம், நீக்கம், திருத்தம் என தினம் 400 முதல் 500 மனுக்கள் வருகிறது. இதை முறையாக பரிசீலிக்க ஊழியர்கள் இல்லை. ஒரு துணை தாசில்தார், ஆர்.ஐ.,க்கள் இருவர், ஒரு இளநிலை உதவியாளர் உள்ளனர். இளநிலை உதவியாளர் உடல்நிலை காரணம் காட்டி மாதத்தில் இருநாட்கள் மட்டும் பணிக்கு வருகிறார். ஆர்.ஐ.,க்களோ மக்கள் கூட்டத்தை சமாளிக்க முடியால், ரேஷன்கடை ஆய்வு என கூறி வெளியே சென்று விடுகின்றனர். இதனால் பொதுமக்கள் பிரச்னை தீர்க்க அதிகாரி இல்லாமல் உள்ளது.இதனால் மக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.


