Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ஓணம்: கவர்னர் முதல்வர் வாழ்த்து

ஓணம்: கவர்னர் முதல்வர் வாழ்த்து

ஓணம்: கவர்னர் முதல்வர் வாழ்த்து

ஓணம்: கவர்னர் முதல்வர் வாழ்த்து

ADDED : செப் 08, 2011 06:55 PM


Google News

சென்னை: மலையாள மக்களின் பிரதான விழாவான ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதையொட்டி, தலைவர்கள் கேரள மக்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், வசந்த கால விழாவாக உவகையோடு கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையையொட்டி, மலையாள மக்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார். மேலும் இந்த நாளில், அகந்தையும், ஆணவமும் அகற்றி, அன்பும், அமைதியும், சகோதரத்துவமும் வளர்க்கப்படவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும், மலையாள மொழி பேசும் மக்களால் கொண்டாடப்படும் திருவோணம் நாளில் அனைவருக்கும் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை உரித்தாக்குவதாக தெரிவித்துள்ளார். இதே போல், கவர்னர் ரோசய்யா, எதிர்க்கட்சித்தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோரும் ஓணம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us