/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/தேர்தல் விதி பின்பற்றாத கோபி நகராட்சி கமிஷனர்தேர்தல் விதி பின்பற்றாத கோபி நகராட்சி கமிஷனர்
தேர்தல் விதி பின்பற்றாத கோபி நகராட்சி கமிஷனர்
தேர்தல் விதி பின்பற்றாத கோபி நகராட்சி கமிஷனர்
தேர்தல் விதி பின்பற்றாத கோபி நகராட்சி கமிஷனர்
ADDED : செப் 28, 2011 12:43 AM
கோபிசெட்டிபாளையம்:கோபி நகராட்சி தலைவர் பதவிக்கான, தி.மு.க., -
தே.மு.தி.க., - ம.தி.மு.க., வேட்பாளர்களுடன் தேர்தல் விதியை மீறி பலர் உடன்
வந்ததால், நகராட்சியில் தேர்தல் விதி கடைபிடிக்கப்படுகிறதா என்ற கேள்வி
எழுந்துள்ளது. வேட்பாளர்களுடன் வந்தவர்களை வெளியேற்ற முடியாமல் தேர்தல்
அதிகாரி ஜான்சன் விழித்தார்.கோபி நகராட்சிக்கு அக்., 17ம் தேதி உள்ளாட்சி
தேர்தல் நடக்கிறது. கோபி நகராட்சி தலைவர் பதவிக்கான வேட்பு மனுவை, தேர்தல்
அலுவலரும்; கமிஷனருமான ஜான்சன், ஒன்று முதல் 10வது வார்டு வரை பொறியாளர்
கிருஷ்ணகுமார், 11 முதல் 20வது வார்டு வரை துப்புரவு ஆய்வாளர்
செந்தில்குமார், 21வது வார்டு முதல் 30வது வார்டு வரை உதவி பொறியாளர்
ஆனந்த் ஆகியோரிடம் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும்.நேற்று முன்தினம்
அ.தி.மு.க., வேட்பாளர் ரேவதிதேவி மட்டும் மனு தாக்கல் செய்தார். அமாவாசை
நாளான நேற்று, தி.மு.க., - தே.மு.தி.க., - ம.தி.மு.க., - பா.ம.க., ஆகிய
கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். ஏராளமான
தொண்டர்கள் குவிந்ததால், கோபி நகராட்சி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.
நகராட்சியின் இரு பக்க கேட்டில், ஒரு கேட் பூட்டப்பட்டது. ஒரு கேட் வழியாக
மட்டும் அனைவரும் அனுமதிக்கப்பட்டனர்.
தேர்தலில் போட்டியிடும் நபர்கள்,
முன்மொழிபவர் என ஒவ்வொருவரையும் சோதனை செய்த பிறகே அலுவலகத்துக்குள்,
போலீஸார் அனுமதிக்கின்றனர். ஆனால், அரசியல் பிரமுகர்கள் பல்வேறு காரணங்களை
கூறி, அலுவலகத்துக்குள் எப்படியாயினும் வந்து விடுகின்றனர்.உள்ளாட்சி
தேர்தல் மனுத்தாக்கல் செய்ய வரும் வேட்பாளருடன், முன் மொழிபவர் மற்றும்
மூன்று பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என தேர்தல் கமிஷன்
உத்தரவிட்டுள்ளது. ஆனால், நேற்று மனு தாக்கலில் போது, அனைத்து கட்சி
வேட்பாளருடன், மனு தாக்கலில் போது குறைந்தபட்சம் பத்து பேர் தேர்தல்
அலுவலரின் அறைக்குள் இருந்தனர். தேர்தல் அலுவலர் ஜான்சன், அவர்களை
வெளியேற்ற முடியாமலும், உடன் இருக்க சொல்ல முடியாமலும் பரிதவித்தார். அவரது
அறையின் வாயிலில் பாதுகாப்புக்கு நின்றிருந்தவரை மீறி, அரசியல்
பிரமுகர்கள் அறைக்குள் சென்றனர்.தி.மு.க., வேட்பாளர் சத்யாவுடன்
எட்டுக்கும் மேற்பட்ட தி.மு.க., நிர்வாகிகளும், தே.மு.தி.க., வேட்பாளர்
தமிழ்செல்வியுடன் ஏழுக்கும் மேற்பட்டோர், ம.தி.மு.க., வேட்பாளர் கீதாவுடன்
15க்கும் மேற்பட்டோரும் வேட்பு மனு தாக்கலின் போது இருந்தனர். கோபி
நகராட்சியில் தேர்தல் விதி கடைப்பிடிக்கப்படுகிறதா என்ற கேள்வி
எழுந்துள்ளது.கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களும், தங்களுடன்
பலரை அழைத்துச் சென்று, வேட்பு மனுதாக்கல் செய்கின்றனர். முகப்பு வாயிலில்
பலத்த சோதனை செய்யும் போலீஸார், தேர்தல் அறைக்குள் இருக்கும் நிர்வாகிகளை
வெளியேற்ற முடியாமல் தவிக்கின்றனர்.