Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/பெண்ணை அடைத்து வைத்துவிபசாரத்தில் ஈடுபடுத்திய இருவர் கைது

பெண்ணை அடைத்து வைத்துவிபசாரத்தில் ஈடுபடுத்திய இருவர் கைது

பெண்ணை அடைத்து வைத்துவிபசாரத்தில் ஈடுபடுத்திய இருவர் கைது

பெண்ணை அடைத்து வைத்துவிபசாரத்தில் ஈடுபடுத்திய இருவர் கைது

ADDED : அக் 11, 2011 11:29 PM


Google News
சென்னை: பெண்ணை அடைத்து வைத்து, விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்த இரு புரோக்கர்களை, விபசார தடுப்புப் பிரிவு போலீசார், கைது செய்தனர்.சென்னை மாநகரில், பங்களா வீடுகளை வாடகைக்கு எடுத்து, பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.இதையடுத்து, கமிஷனர் திரிபாதி உத்தரவின் படி, மத்திய குற்றப்பிரிவில் உள்ள விபசார தடுப்புப் பிரிவு உதவி கமிஷனர் கிங்ஸ்லின் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சாண்டியாகோ தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், சென்னையின் பல்வேறு பகுதிகளில், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கொடுங்கையூர் பகுதியில், சிவப்பு நிற சான்ட்ரோ காரில் வந்த நபர், மாறுவேடத்தில் இருந்த போலீசாரிடம், வீட்டில் பெண் இருப்பதாக கூற, அங்கு சென்ற போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில், சென்னையைச் சேர்ந்த சதீஷ்குமார், 23 மற்றம் அப்துல்சலாம், 54, ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்கள் அடைத்து வைத்திருந்த பெண்ணையும் மீட்டனர். இருவரிடமிருந்து, மொபைல் போன், கார் ஆகியவற்றை கைப்பற்றினர். இந்த விபசார கும்பலுக்கு தலைவியாக, செயல்பட்ட பத்மபிரியா தலை மறைவாகிவிட்டார். அவரை, போலீசார் தேடி வருகின்றனர்.கைது செய்யப்பட்ட புரோக்கர்கள் இருவரும், சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட இளம் பெண், மயிலாப்பூர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us