Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/புறநகர் செல்லும் பயணிகளிடம் 50 காசு "சுடும்' பஸ் கண்டக்டர்கள்

புறநகர் செல்லும் பயணிகளிடம் 50 காசு "சுடும்' பஸ் கண்டக்டர்கள்

புறநகர் செல்லும் பயணிகளிடம் 50 காசு "சுடும்' பஸ் கண்டக்டர்கள்

புறநகர் செல்லும் பயணிகளிடம் 50 காசு "சுடும்' பஸ் கண்டக்டர்கள்

ADDED : ஆக 01, 2011 10:08 PM


Google News

திருப்பூர் : அரசு பஸ்களில் புறநகர் செல்லும் பயணிகளுக்கு, 50 காசு சில்லரையை கண்டக்டர்கள் கொடுப்பது இல்லை.

பல்லடம், அவினாசி உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் திருப்பூர் வந்து செல்கின்றனர். டவுன் பஸ்கள், கோவை, ஈரோடு போன்ற புறநகர் பகுதி வழியாக வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களில் திருப்பூர் வந்து செல்கின்றனர்.திருப்பூரில் இருந்து பல்லடம், அவினாசி உள்ளிட்ட புறநகர் பகுதிகளுக்கு செல்வதற்கு, சாதாரண பஸ்களில் கட்டணம் ரூ.4.50; எக்ஸ்பிரஸ் பஸ்களில் ஐந்து ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அவினாசி, பல்லடம் செல்லும் பெரும்பாலான பயணிகள், டிக்கெட்டுக்காக 5.00 ரூபாயை கண்டக்டர்களிடம் கொடுக்கின்றனர்.சாதாரண பஸ்களில் கட்டணம் ரூ.4.50 ஆக இருந்தாலும், ஐந்து ரூபாய் வாங்கிக் கொண்டு, மீதி சில்லரை கொடுக்காமல் கண்டக்டர்கள் நழுவி விடுகின்றனர். 50 காசுக்காக சங்கோஜப்பட்டு, பெரும்பாலான பயணிகள், 'போனால் போகட்டும்' என்று விட்டுவிடுகின்றனர். வழக்கமாக பயணிக்கும் சிலர், தினமும் 50 காசு இழக்க மனமின்றி, கண்டக்டரிடம் சில்லரை கேட்கின்றனர்.அதற்கு, 'நீங்கள் தான் சரியான சில்லரை கொடுக்க வேண்டும்; உங்களது 50 காசு எங்களுக்கு தேவையில்லை' என்று ஏளனமாக பதிலளிக்கின்றனர். இதனால், வேறு வழியின்றி சில்லரை கேட்பதையே நிறுத்திக் கொள்கின்றனர் பயணிகள். அரசு போக்குவரத்து கழக அதிகாரி கூறுகையில், 'சாதாரண பஸ்களில் 4.50 ரூபாய் கட்டணம்; எக்ஸ்பிரஸ் பஸ்களில் ஐந்து ரூபாய். 50 காசு சில்லரை இல்லாத காரணத்தால், கொடுக்காமல் இருந்திருக்கலாம்,' என்றார். இருப்பினும், பெரும் பாலான அரசு பஸ்களில் 50 காசு சில்லரையை, சில கண்டக்டர்கள் கொடுப்பதில்லை என்பதே உண்மை.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us