ADDED : செப் 02, 2011 11:07 PM
ஆனைமலை : ஆனைமலை அடுத்த ஆழியாரில் விழா கால விடுமுறையால் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்தனர்.
ஆழியார் அணைப்பகுதி புதிய வகை புல்கள் நடவு செய்யப்பட்டு அணை புதுப்பொலிவுடன் காணப்படுகிறது. ஆழியார் அணைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஆழியார் அணையை அடுத்துள்ள மங்கிபால்ஸ்க்கும் சென்று வருகின்றனர். ரம்ஜான், விநாயக சதுர்த்தி விழா விடுமுறையால் நூற்றுக்கணக்காணவர்கள் குவிந்ததால் ஆழியார் களை கட்டியது.


