/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/9வது வார்டில் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வேன் : தே.மு.தி.க., வேட்பாளர் பேட்டி9வது வார்டில் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வேன் : தே.மு.தி.க., வேட்பாளர் பேட்டி
9வது வார்டில் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வேன் : தே.மு.தி.க., வேட்பாளர் பேட்டி
9வது வார்டில் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வேன் : தே.மு.தி.க., வேட்பாளர் பேட்டி
9வது வார்டில் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வேன் : தே.மு.தி.க., வேட்பாளர் பேட்டி
ADDED : செப் 30, 2011 01:16 AM
சிவகங்கை : சிவகங்கை நகராட்சி 9வது வார்டு கவுன்சிலராக என்னை தேர்வு செய்தால், வார்டில் குடிநீர், ரோடு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மக்களுக்கு கிடைக்க பாடுபடுவேன்,'' என, தே.மு.தி.க., வேட்பாளர் எஸ்.நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: நான் இந்த வார்டிற்கு புதியவன் அல்ல. சென்ற தேர்தலில் இந்த வார்டில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில், மக்கள் பணியாற்ற முடியாமல் போனது. இத்தேர்தலில் உங்களுக்கு பணியாற்ற எனக்கு ஒரு நல்ல வாய்ப்பை தாருங்கள். என்னை தேர்வு செய்தால், வார்டு முழுவதும் தினமும் சுற்றி வந்து குறைகளை கேட்பேன். குறிப்பாக சிவன் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் சேதமடைந்துள்ள ரோடு, கால்வாய்களை சீரமைப்பேன். என்றார். நகர் அவை தலைவர் தர்மராஜன், செயலாளர் சன்னாசி, பொருளாளர் ராமகிருஷ்ணன், வார்டு செயலாளர்கள் தன பாலன், ம@கஸ்வரன், செந்தில்குமார் பங்கேற்றனர்.