ADDED : செப் 07, 2011 10:20 PM
விழுப்புரம்:விக்கிரவாண்டி அரிமா சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்
நடந்தது.அரிமா சங்க தலைவர் ராசி ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். வட்டார
தலைவர் சந்தானம் முன்னிலை வகித்தார். செயலாளர் முருகன் வரவேற்றார். கோவை
சங்கரா மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர் பொதுமக்கள் 164 பேருக்கு கண்
பரிசோதனை செய்தனர். இதில் 72 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டு,
கோவைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.முகாமில் பொருளாளர் அஸ்கர் அலி,
இயக்குனர் குமாரசாமி, மாவட்ட தலைவர்கள் விஜயராகவலு, கீதாஞ்சலி சீனுவாசன் கலந்து கொண்டனர்.


