/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு துவக்கம் குறைந்த கட்டணத்தில் அதிக சானல்கள்அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு துவக்கம் குறைந்த கட்டணத்தில் அதிக சானல்கள்
அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு துவக்கம் குறைந்த கட்டணத்தில் அதிக சானல்கள்
அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு துவக்கம் குறைந்த கட்டணத்தில் அதிக சானல்கள்
அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு துவக்கம் குறைந்த கட்டணத்தில் அதிக சானல்கள்
ADDED : செப் 03, 2011 02:52 AM
திருநெல்வேலி:நெல்லையில் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு நேற்று முதல்
ஆரம்பமானது. குறைந்த கட்டணத்தில் அதிக சானல்கள் தெரிவதால் பொதுமக்கள்
'குஷி' அடைந்துள்ளனர்.நெல்லை அரசு கேபிள் கார்ப்பரேஷன் துவக்க விழா நெல்லை
ஜங்ஷன் பூம்புகார் மையத்தில் நேற்று நடந்தது. இதனை கலெக்டர் செல்வராஜ்
துவக்கி வைத்தார். எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், மாநகராட்சி கமிஷனர்
வரதராஜூ, ஆர்.டி.ஓ ராஜகிருபாகரன், தாசில்தார் அபுல்காசீம், நெல்லை அரசு
கேபிள் டிவி கார்ப்பரேஷன் பொறுப்பு அலுவலர் ராஜன் உட்பட பலர் கலந்து
கொண்டனர்.இதில் அதிகாரிகள் கூறியதாவது:நெல்லையில் துவக்கப்பட்ட அரசு கேபிள்
மூலம் மாதம் 70 ரூபாய்க்கு அனைத்து இலவச சானல்கள் ஒளிபரப்பபடுகிறது.
முதற்கட்டமாக நெல்லை பகுதிகளில் மட்டும் இந்த ஒளிபரப்பு செய்யப்பட்டது.
வரும் 15ம் தேதிக்குள் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த ஒளிபரப்பு
செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.தற்போது கட்டண சானல்கள்
தவிர பிற அனைத்து சானல்களும் அரசு கேபிளில் ஒளிபரப்பபடுகிறது. பொதுமக்கள்
அனைவரும் ஒத்துழைத்தால் விரைவில் கட்டண சானல்களும் குறைந்த கட்டணத்தில்
ஒளிபரப்பபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது பிரைம் பாண்டில் அனைத்து
தமிழ் சானல்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. லோக்கல் கேபிள்
டிவிக்களுக்கு மாவட்டத்திற்கு தலா 5 இடங்கள் ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.நெல்லை மாநகர பகுதியில் மட்டும் 250 ஆபரேட்டர்கள்,
மாவட்டத்தில் 1,400 ஆபரேட்டர்கள் அரசு கேபிள் டிவி இணைப்பு பெற
விண்ணப்பித்துள்ளர். இவர்களுக்கு படிப்படியாக இணைப்புகள் வழங்கப்படும்.
தற்போது 15 கி.மீ சுற்றளவில் ஆப்டிக்கல் பைபர் கேபிள் மூலம் அரசு கேபிள்
டிவி சானல்கள் ஒளிபரப்பபடும். பிற பகுதிகளில் பி.எஸ்.என்.எல் இணைப்பு மூலம்
ஒளிபரப்பு மேற்கொள்ளப்படும்.ஆபரேட்டர்கள் பொதுமக்களிடமிருந்து 70 ரூபாய்
கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். இதனை மீறி வசூலிக்க கூடாது.
ஆபரேட்டர்கள் மூலம் தற்போதைக்கு ரசீது கொடுக்கும் திட்டம் ஏதும் கிடையாது.
அதிக கட்டணம் வசூல், டிவி நிகழ்ச்சிகள் சரிவர தெரியாத சூழ்நிலை, தொழில்
நுட்ப கோளாறுகள் உட்பட பல்வேறு பிரச்னைகள் இருந்தால் '0462 - 2330080' என்ற
போனில் புகார் தெரிவிக்கலாம்.தற்போது ஒரு கேபிள் இணைப்புக்கு
ஆபரேட்டர்களுக்கு 20 ரூபாய் வழங்கப்படும். பொதுமக்களுக்கு ஆபரேட்டர்கள்
உரிய சேவைகளை செய்ய வேண்டும். இணைப்பு அதிகமாக வழங்கி அரசு கேபிள் டிவி
நிறுவனத்தில் குறைவாக இணைப்புகள் வழங்கப்பட்டதாக ஆபரேட்டர்கள் 'கணக்கு'
காட்டினால் இதுதொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு கடும் நடவடிக்கைகள்
எடுக்கப்படும்.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.இதில் அதிமுக நிர்வாகிகள்
சுதா பரமசிவம், தச்சை ராஜா, ஆர்.பி ஆதித்தன், பரணி சங்கரலிங்கம், கேபிள்
டிவி ஆபரேட்டர்கள் நலச் சங்க தலைவர் உதய சவுந்தரராஜன்,செயலாளர் ஆனந்த்,
துணைத் தலைவர் சங்கர சுப்பிரமணியன், பொன்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


