/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ஸ்டாலின் மூடு-அவுட்! காஜாமலை விஜய் வேட்புமனு தள்ளுபடிஸ்டாலின் மூடு-அவுட்! காஜாமலை விஜய் வேட்புமனு தள்ளுபடி
ஸ்டாலின் மூடு-அவுட்! காஜாமலை விஜய் வேட்புமனு தள்ளுபடி
ஸ்டாலின் மூடு-அவுட்! காஜாமலை விஜய் வேட்புமனு தள்ளுபடி
ஸ்டாலின் மூடு-அவுட்! காஜாமலை விஜய் வேட்புமனு தள்ளுபடி
ADDED : அக் 08, 2011 11:47 PM
திருச்சி: குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் இருக்கும் காஜாமலை விஜய் வேட்புமனு, நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.திருச்சி, மிளகுபாறை பகுதி தி.மு.க., செயலாளராக இருப்பவர் காஜாமலை விஜய்.
இவர், மாஜி அமைச்சர் நேருவுக்கு வலதுகரமாக செயல்பட்டார். இதனால், ஆளும் கட்சி வட்டாரத்தில் குறுகிய காலத்தில் நேருவுக்கு இணையாக வளர்ச்சி பெற்றார். மாஜி அமைச்சர் நேருவுக்கு 'எல்லாமே' இவர்தான் என்ற தோற்றத்தால், கட்சி நிர்வாகிகள் மத்தியில் இவருக்கு மதிப்பும், செல்வாக்கும் கூடியது.கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, கொலை மிரட்டல், நில அபகரிப்பு போன்ற பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டார். மாநகராட்சியில் தனக்கு எதிராக செயல்பட்ட மிகப்பெரிய ஒப்பந்ததாரர் ஒருவரை, மாநகராட்சியில் ஒப்பந்தம் எடுப்பது சம்பந்தமாக கொலை வெறி தாக்குதல் நடத்தி, மாநகராட்சி நிர்வாகத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தவர் இந்த காஜாமலை விஜய்.இவரை எதிர்த்து மாநகராட்சியிலும், நெடுஞ்சாலைத்துறையிலும் ஒப்பந்தம் எடுத்து தொழில் செய்ய முடியாமல் பலர் தொழிலை விட்டே ஓடி விட்டனர். மாஜி அமைச்சருக்கு இணையான செல்வாக்கு இருந்ததால், நிழல் அமைச்சராகவே தன்னை வெளி உலகத்துக்கு அடையாளம் காட்டினார்.மாஜி அமைச்சர் நேரு மீது நில அபகரிப்பு வழக்கு, அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு போன்ற வழக்குகள் பாய்ந்தது. அதேபோல், இவர் மீதும் காஜாமலை பகுதியை சேர்ந்த ஒருவர் கொடுத்த நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார்.இவர் மீது அடுக்கடுக்கான புகார் வந்ததையடுத்து, குண்டர் தடை சட்டத்தில் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திருச்சி மாநகராட்சி தேர்தலில் 42வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு வேட்பு தாக்கல் செய்திருந்தார். நேற்று வேட்புமனு பரிசீலனை செய்யப்பட்டது. மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் ஒருவர் மாநகராட்சியில் ஒப்பந்ததாரராக இருக்கக் கூடாது.ஆனால், இவர் மாநகராட்சி ஒப்பந்ததாரராக தொடர்ந்து நீடிப்பதால், இவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. மாற்று வேட்பாளராக இவரது மனைவி சுந்தரி வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். ஆகவே, சுந்தரியின் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.நேற்று திருச்சியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் தி.மு.க.,பொருளாளர் ஸ்டாலின் பங்கேற்றார். மிளகு பாறை பகுதியில் பிரச்சாரத்தின் போது, காஜாமலை விஜய் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து ஸ்டாலினுக்கு கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.இதனால் மூட் -அவுட் ஆன ஸ்டாலின் மற்றும் கட்சி நிர்வாகிகள் அவரது, மனைவி சுந்தரியை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்தனர்.


