/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/குன்னம் அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு: மர்ம நபர்கள் 45 பவுன் பறிப்புகுன்னம் அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு: மர்ம நபர்கள் 45 பவுன் பறிப்பு
குன்னம் அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு: மர்ம நபர்கள் 45 பவுன் பறிப்பு
குன்னம் அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு: மர்ம நபர்கள் 45 பவுன் பறிப்பு
குன்னம் அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு: மர்ம நபர்கள் 45 பவுன் பறிப்பு
ADDED : ஆக 12, 2011 10:42 PM
பெரம்பலூர்: குன்னம் அருகே நேற்று அதிகாலை விவசாயியை அரிவாளால் வெட்டி 45
பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை குன்னம் போலீஸார் தேடி
வருகின்றனர்.பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே நல்லறிக்கை கிராமத்தை
சேர்ந்தவர் விவசாயி ராமலிங்கம் (60). அவரது மனைவி செல்லம்மாள் (55)
அவர்களது மகன் ராமதுரை (30), அவரது மனைவி வனிதா (25) ஆகிய நான்கு பேரும்
ஒரு வீட்டில் வசித்து வருகின்றனர்.
நேற்று அதிகாலை அவர்களது வீட்டுக்கு
சென்ற அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த
28 பவுன் நகை மற்றும் 35 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு
வெளியே வந்தனர்.இதையறிந்த செல்லம்மாள் சத்தமிட்டதை தொடர்ந்து,
ராமலிங்கமும், ராமதுரையும் மர்ம நபர்களிடமிருந்து நகையை பறிக்க
முயற்சித்தனர். இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் ராமலிங்கத்தையும்,
ராமதுரையையும் அரிவாளால் வெட்டி, செல்லம்மாள் மற்றும் வனிதா ஆகியோர்
கழுத்தில் அணிந்திருந்த 17 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பித்து
ஓடினர்.தகவலறிந்த எஸ்.பி., ரூபேஸ்குமார் மீனா, டி.எஸ்.பி., சிவக்குமார்,
இன்ஸ்பெக்டர் சுப்பையன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று
காயமடைந்த நபர்களை அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கைரேகை
நிபுணர்களும் தடயங்களை பதிவு செய்தனர். புகாரின்பேரில் குன்னம் போலீசார்
விசாரிக்கின்றனர்.


